உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிணற்றில் விழுந்த யானை மீட்பதில் சிக்கல்

கிணற்றில் விழுந்த யானை மீட்பதில் சிக்கல்

மலப்புரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உரங்காட்டேரி பகுதி விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில், யானை ஒன்று நேற்று தவறி விழுந்தது. அதை மீட்கும் பணியில் மாவட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், யானை இந்த பகுதியில் உள்ள பயிர்களை அடிக்கடி சேதப்படுத்துவதால் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.மேலும், மீட்கப்படும் யானையை இதே பகுதி வனத்தில் விடக்கூடாது; யானையை மீட்டு தொலைவில் உள்ள அடர் வனப்பகுதியில் விட வேண்டும் என்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால், கிணற்றில் விழுந்த யானையை மீட்பதில் வனத்துறையினருக்கு சிக்கல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி