உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரி மேல் வரி விதிக்கும் டிரம்ப்; கூடுகிறது பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு

வரி மேல் வரி விதிக்கும் டிரம்ப்; கூடுகிறது பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில் நடக்கும் 'பிரிக்ஸ்' அமைப்பின் உச்சி மாநாட்டில், நம் வெளி யுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பங்கேற்கிறார்.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவ தால் கடுப்பான அமெ ரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். இதே போல, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இருந்து இறக்குமதியா கும் பொருட்களுக்கும் 50 சதவீத வரி விதித்தார்.இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்க, பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமை யில், நாளை மறுதினம் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு, 'வீடியோ கான் பரன்ஸ்' வாயிலாக நடக்கிறது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.இந்த தகவலை நம் வெளியுறவு அமைச் சகம் நேற்று உறுதிப்படுத்தியது. இந்த கூட்டத்தில், அமெரிக்க வர்த்தக கொள்கை மட்டுமின்றி, வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் தலைவர்களை ஓரணியில் திரட்டவும் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தவிர, உறுப்பினர் நாடுகளும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 06, 2025 10:29

ஒரு நாட்டின் பிரதமர் அந்த நாட்டின் நலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதைக் கண்டு பதறுவது ஏன். புலம்புவது ஏன். இந்திய பொருளாதாரம் தொழிலை இந்திய அரசை நசுக்க நினைத்த கூட்டம் இப்போது பதறுகிறது


A. Saravana Kumar
செப் 06, 2025 08:01

well done India


Tamilan
செப் 06, 2025 00:55

ஒருநாட்டின் அதிபர் அவர் நாட்டில் அந்நாட்டிற்கு என்னவேண்டுமானாலும் செய்வார். அதைப்பற்றி உலகமெல்லாம் பதறுவது ஏன் ?. அலறுவது ஏன்


Tamilan
செப் 06, 2025 00:31

உலகமெல்லாம் பொய்ப்பரப்பிவந்த கும்பல் இப்போது உலகமெல்லாம் தஞ்சமடைய இடம் தேடி அலைகிறது


புதிய வீடியோ