உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய விமான நிலையங்களில் செயல்பட்ட துருக்கி நிறுவனம்: அனுமதியை ரத்து செய்தது மத்திய அரசு

இந்திய விமான நிலையங்களில் செயல்பட்ட துருக்கி நிறுவனம்: அனுமதியை ரத்து செய்தது மத்திய அரசு

புதுடில்லி: டில்லி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த துருக்கி நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது.இந்தியா எவ்வளவு உதவி செய்தாலும், அதனை மதிக்காமல் துருக்கி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த மோதலின் போது கூட பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை வழங்கியதுடன், அதனை இயக்குவதற்கு பணியாளர்களையும் துருக்கி அனுப்பி வைத்தது. துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதை நமது ராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர்.இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டுடனான ஒப்பந்தத்தை இந்திய கல்வி நிறுவனங்கள் ரத்து செய்து வருகின்றன. சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது.இந்நிலையில் இந்தியாவில் டில்லி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் முக்கியமான சில பணிகளை துருக்கியைச் சேர்ந்த செலிபி நிறுவனம், இந்திய அரசின் அனுமதியுடன் செயல்படுத்தி வந்தது.பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை துருக்கி எடுத்ததால், தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்நாட்டைச் சேர்ந்த செலிபி நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்துவந்தது.இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; '' நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செலிபி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்புதலை உடனடியாக திரும்ப பெறுகிறோம்,'' எனத் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் பணிகள்

இந்த செலிபி நிறுவனம் இரண்டு குழுக்களாக இந்தியாவில் செயல்படுகிறது. செலிபி இந்திய விமான சேவைகள் என்று நிறுவனம் மூலம் விமானங்கள் தரையிறங்குவது தொடர்பான பணி நடந்து வந்தன.டில்லி சரக்கு முனைய நிர்வாக இந்தியா என்ற நிறுவனம் மூலம் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் பணி நடந்தது.இவற்றில் சாய்வு தள சேவைகள், விமானம் சுமுகமாக பயணம் செய்யும் வகையில் எடை மேலாண்மை மற்றும் விமான செயல்பாடுகள், விமானத்தில் ஏற உதவும் வாகனங்கள், சரக்கு, அஞ்சல் சேவை மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் செய்து வந்தது.

முடிவுக்கு வருகிறது

இந்நிலையில், அதானி விமான நிலைய ஹோல்டிங் நிறுவன அதிகாரி கூறியதாவது: விமான நிலையத்தில் ஓய்வறைகளுக்கான வசதியை வழங்கும் டிராகன்பாசுடனான எங்கள் உறவு முடிவுக்கு வருகிறது. டிராகன்பாஸ் வாடிக்கையாளர்கள் இனிமேல், அதானி நிர்வகிக்கும் விமான நிலையங்களில் ஓய்வறைகளை அணுக முடியாது. இந்த மாற்றம் விமான நிலைய ஓய்வறை மற்றும் பிற வாடிக்கையாளர்களின் பயண அனுபவத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Subash BV
மே 17, 2025 13:31

Nonsense. Dont keep bending just because Indira Gandhi the muslim lady d this as a secular nation. ONLY TEMPLES ARE PAYING TAX. CHURCHES AND MASQUEES DOESNT. UNDERSTAND AND RESPECT HINDU RELIGION. YOUR GRAND GRANDFATHERS MIGHT BE HINDUS. WAKE UP.


Riyaz shaikh
மே 16, 2025 18:49

ஆதாரம் என்ன,? சும்மா ஆதாரமற்ற தன்னிச்சையான கருத்துக்களை பதியவேண்டாம். இந்திய நாடு இன மத பேதமற்ற சமத்துவ நாடு. இங்கு உயா்சாதி கீழ்சாதி என்ற பேச்சுக்கே இடமில்லை.


gk kuru
மே 16, 2025 13:35

வாழ்த்துக்கள் மத்திய அரசுக்கும் இதே மாதிரி ஒவ்வொரு நாடும் நமக்கு உறவாடி கெடுப்பதற்கு இதை ஒரு வழி அமல்படுத்துவதற்கு மிகவும் நன்றி நன்றி இந்தியா ஒன்றும் கோழை அல்ல


Karthikeyan
மே 16, 2025 07:55

எத்தனை நன்மை செய்தாலும் வங்கதேசம்... பாகிஸ்தான்... இலங்கை... அஜர்பைஜான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் நன்றி மறந்த துரோகிகள்...ஆகவே அந்நாடுகளில் இடி விழுந்தாலும் எந்த உதவியும் இந்தியா செய்யக்கூடாது...எவனாக இருந்தாலும் நாம் அவனுங்களிடம் நமது தன்மானத்தை இழக்கக் கூடாது.. ஜெய்ஹிந்த்...


jayaraj nagarajan
மே 16, 2025 04:55

பாஸ்போர்ட்ல் எக்ஸப்ட் துருக்கி அசர்பைசான் என்று பதிவு செய்ய வேண்டும்


Kasimani Baskaran
மே 16, 2025 04:13

இன்னும் கூட துருக்கி ஒட்டோமான் பேரரசின் பிரதிநிதி போல நடந்து கொள்வது துரதிஸ்டவசமானது. நாம் தான் முயற்சி எடுத்து நல்ல பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.


sasikumaren
மே 16, 2025 02:29

மிக சிறப்பான வேலைகளை மத்திய அரசு செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது பணத்தையும் நாம் கொடுத்து விட்டு குற்றங்களையும் நாம் சுமக்கிறோம் அதே பக்கிஸுக்கு துணை போகும் மற்ற நாடுகளையும் நாம் கணக்கெடுக்க வேண்டும் சைனா, அமெரிக்க, பல.தேஷ் போன்ற எந்த நாடாக இருந்தாலும் அந்த நாடுகளுடன் இருக்கும் ஒப்பந்தங்களை குறைத்து கொள்ள வேண்டும் இந்தியாவை நம்பி தான் சில பல நாடுகள் இருக்கின்றன.


MUTHUKUMAR C
மே 15, 2025 23:41

நல்ல முடிவு


தாமரை மலர்கிறது
மே 15, 2025 22:55

துரோகிகளுக்கு இந்தியாவில் இடமில்லை.


Ambedkumar
மே 15, 2025 22:30

ஐரோப்பாவில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் துருக்கி நாட்டவர் பரவலாக வியாபித்திருக்கிறார்கள். இங்குள்ள கெபாப் உணவு விற்பனை மற்றும் தங்கும் விடுதிகளை நிர்வகிப்பவர்கள் இவர்களே. இவர்கள் பெரிய பெரிய குடும்பங்களாக வாழ்வதை இங்கு பரவலாகப் பார்க்க முடியும்


புதிய வீடியோ