உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் அரசியலில் திருப்பம்: 39 எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத் பயணம்

ஜார்க்கண்ட் அரசியலில் திருப்பம்: 39 எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத் பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 39 பேர் திடீரென ஆந்திரா மாநிலம் ஹைதராபாத் சென்றனர். இதனால் ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நில அபகரிப்பு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் . போக்குவரத்து அமைச்சர் சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது எழுந்த குற்றச்சாட்டில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து எட்டு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தார். பின் இரு நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு ஹேமந்த் சோரனை கைது செய்தனர்.அதற்கு முன்பாக கவர்னரை சந்தித்து ராஜினமா கடிதத்தை ஹேமந்த் சோரன் வழங்கினார். புதிய முதல்வராக சாம்பாய் சோரன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த சாம்பாய் சோரன் .ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துச்சென்று ஆட்சிஅமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து கவர்னர் பெரும்பான்மையை நிரூபிக்க கெடு விதித்தார். .

விமானத்தில் ஹைதராபாத் ஓட்டம்

மொத்தமுள்ள 81 உறுப்பினர்களில் பொரும்பான்மைக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் போதிய எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லை என கூறப்படுகிறது. குதிரை பேரம் நடக்கலாம் என கூறப்படுகிறது.இதையடுத்து சாம்பாய் சோரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 39 பேரும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டதாகவும், இவர்களில் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஞ்சி திரும்பி வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சாம்பாய் சோரன் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

P. SRINIVASALU
பிப் 05, 2024 13:27

. பாவம் ஜனநாயகம்.


Indian
பிப் 02, 2024 10:25

திருடர்கள் ஜாக்கிரதை


Ramesh Sargam
பிப் 02, 2024 00:47

அவர்கள் பயணிக்கும் அந்த விமானம், வழி தவறி எங்காவது அமேசான் காட்டுப்பகுதியில் கொடிய விலங்குகளுக்கே இடையே தரை இறங்க வேண்டும்.


கட்டத்தேவன்,,திருச்சுழி
பிப் 01, 2024 21:38

அமலாக்கத்துறை முதன் முதலில் விசாரனை செய்ய சம்மன் அனுப்பிய போதே ஒழுங்கு மரியாதையா இந்த ஹேமந்த் சோரன் போயிருந்தா இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? இதை உதாரணமா கொண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மரியாதையாக அமலாக்கத்துறை ஆபீஸில் போய் ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் அந்த ஒயிட் காலர் களவானிக்கும் இதே நிலைமைதான் ஏற்படும்.


Bye Pass
பிப் 01, 2024 22:14

கட்டம் ..சுழி ...அந்த பக்கம் புள்ளி கூட்டணி ...என்ன கணக்குன்னே தெரியல


vaiko
பிப் 01, 2024 22:29

தேர்தலில் தோற்றால் அமீதும், மோடியும் இப்படித்தான் அலைய போகின்றார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.


கனோஜ் ஆங்ரே
பிப் 02, 2024 11:31

திருச்சுழிக்காரே... உங்களுக்கு வடிவேல் காமெடில பதில் சொல்றேன்.... வடிவேல் மேடையில என்கட்சிக்காரன் என்னய்யா பண்ணான்... ராங் போன் போட்டான்...ங்கற வசனம் பேசுறப்ப எதிர்க்குற உட்கார்ந்திருப்பவன் “மச்சான், இவன்தான் எங்கேயோ செமத்தையா வாங்கிட்டு வந்து, இங்க அவன் ஆளு வாங்குன மாதிரி பேசுறான் பாரு”...ன்ற வசனம்தான் உங்க கமெண்ட்டுக்கு பதில்.


கேடுகெட்ட கான்கிராஸ்
பிப் 01, 2024 21:08

கான்கிராஸ் அழிக்கப்பட வேண்டிய தீய சக்தி!


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை