மேலும் செய்திகள்
கஞ்சா பதுக்கல் 2 பேர் கைது
05-Jan-2025
குருகிராம்,:ஹரியானாவில், சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டம் புன்ஹானா-ஜுர் ஹெடா சாலையில் போலீசார் இரவு ரோந்து சென்றனர். அப்போது, தேக் கிராமத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். ஷரீப் மற்றும் இர்சாத் என்பதும் வெடி பொருட்களை சலீம் என்பவரிடம் விற்க நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது.உதவி எஸ்.ஐ., நவ்நீத் சிங் கூறுகையில், “ கைது செய்த ஷரீப் மற்றும் இர்சாத் ஆகியோரிடம் இருந்து, சுரங்கத்தில் பயன்படுத்தும் 100 நாட்டு வெடிகள், 96 மீட்டர் பாதுகாப்பு பியூஸ் வயர் மற்றும் 200 டெட்டனேட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். சட்டவிரோத சுரங்கம் தோண்டும் கும்பலுக்கு வெடிபொருட்களை விற்பனை செய்வதை இருவரும் ஒப்புக் கொண்டனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நூஹ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். நீதிபதி உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சலீமை பிடிக்க தேடுதல் வேட்டை நடக்கிறது.
05-Jan-2025