மேலும் செய்திகள்
வேன் கவிழ்ந்து சென்னை பக்தர் உயிரிழப்பு
06-Jan-2025
கர்நாடக மாநிலம், கொள்ளேகால் சாம்ராஜ் நகரை சேர்ந்தவர் நாகராஜ், 58, வெங்கடாதிரி, 62, மகேஷ்குமார், 44, துரைசாமி, 61, சாமி, 40, ஆகிய ஐந்து அய்யப்ப பக்தர்கள் காரில் சபரிமலைக்கு சென்றனர்.தரிசனம் முடிந்து ஊருக்கு திரும்பியபோது, சாமி காரை ஓட்டினார். கோவை மாவட்டம், சிறுமுகை அருகே சத்தியமங்கலம் மெயின் ரோட்டில், நேற்று காலை 5:50 மணிக்கு, கோவில் மேடு பால்காரன் சாலை என்னும் இடத்தில் கார் வந்தது.அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் கார் மோதியது. இதில், நாகராஜ், வெங்கடாதிரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.காயமடைந்த மகேஷ்குமார், துரைசாமி, சாமி ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துரைசாமி, சாமி தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர் - நமது நிருபர் -.
06-Jan-2025