உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனையில் தீ இருவர் காயம்

மருத்துவமனையில் தீ இருவர் காயம்

நொய்டா:நொய்டா தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.நொய்டா, 24வது செக்டார் சுமித்தா மருத்துவமனை தரைக் தளத்தில் உள்ள பதிவு அறையில், நேற்று காலை தீப்பற்றியது. மேல் தளங்களில் கரும்புகை பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர், ஒரு மணி நேரத்தில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் இருந்த நோயாளிகள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர். மூன்றாவது தளத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கிடையில், நோயாளிகளில் உதவியாளர்கள் இருவர், ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்றதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ