உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல் புகாரில் நீதிபதிகள் இருவர் பணிநீக்கம்

ஊழல் புகாரில் நீதிபதிகள் இருவர் பணிநீக்கம்

மும்பை: மஹாராஷ்டிராவில், ஊழல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், இரு நீதிபதிகளை பணிநீக்கம் செய்து, மும்பை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த கீழமை நீதிமன்றத்தின் நீதிபதியாக பணிபுரிந்தவர் தனஞ்செய் நிகாம். ஜாமின் வழக்கு ஒன்றில் இவர் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் தனஞ்செய் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல், மும்பையைச் சேர்ந்த சிவில் நீதிபதி இர்பான் ஷேக், போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த இரு வழக்குகளை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் இருவரையும் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி