உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை

இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணையை வரும் ஏப்., 28 அன்று தேர்தல் கமிஷன் துவக்க உள்ளது.'உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளில் தீர்வு காணும் வரை, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது; பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது' என, தேர்தல் கமிஷனிடம், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கள் கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் புகார் மனுக்கள் அளித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gov3r27h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வந்தது. அதற்கு தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்கக் கோரி, கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், எம்.ஜி.ராமச்சந்திரன், வா.புகழேந்தி ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுவில், சின்னம் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்தல் கமிஷன் விசாரணையை தொடரலாம். புகார் மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பின், தேர்தல் கமிஷன் விசாரணையை துவக்கலாம்.தேர்தல் கமிஷன் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது என உத்தரவிட்ட, பழனிசாமி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தனர்.இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக வரும் 28 ம் தேதி தேர்தல் கமிஷன் விசாரணையை துவக்குகிறது. அன்றைய தினம் அனைத்து புகார் மனுதாரரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தாமரை மலர்கிறது
ஏப் 17, 2025 21:08

பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வந்ததுமே, இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு தான் என்பது நிச்சயமாகிவிட்டது.


M Ramachandran
ஏப் 17, 2025 20:13

பழனியின் வீம்பிற்கு வீக்கத்திற்கு கடிவாளம் போடப்படுகிறது


Rajkumar
ஏப் 17, 2025 19:18

தமாசு...தமாசு..


Murugesan
ஏப் 17, 2025 19:14

இரட்டை இலைக்காக நாடகமாடுகிற நயவஞ்சகன் எடப்பாடி நம்பவைத்து கருவருக்கும் சுயநலவாதி


மணியன்
ஏப் 17, 2025 19:04

எடப்பாடியார் எந்த சின்னத்தில் நின்றாலும் 200க்கு மேல் வெற்றி உறுதி.


S.Martin Manoj
ஏப் 17, 2025 18:28

என்னாது தேர்தல் கமிஷனா


ديفيد رافائيل
ஏப் 17, 2025 17:50

ஒருவேளை ADMK கட்சி இரட்டை இலை சின்னத்தை மீட்க BJP கட்சியுடன் சுயநல கூட்டணி வைத்திருக்க வாய்ப்பிருக்கு.


Haja Kuthubdeen
ஏப் 17, 2025 18:35

நியாயமாக பார்த்தால் பெரும்பாண்மை நிர்வாகிகள் எம் பி..எம் எல் ஏக்கள் தொண்டர்கள் எடப்பாடி தலைமையில்தான் இருக்கிறார்கள்.தமிழ்நாடு முழுதும் உள்ள கிளை கழகங்கள் அவரின் தலைமையிலேயே இயங்குது.மகாராஸ்டிராவில் மட்டும் உடணடியா ஷிண்டே அஜித்பவார்தான் என்று தீர்ப்பளித்த தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் சுணக்கமோ தெரியவில்லை...இப்ப ரூட் கிளியர் ஆனதும் வேகம் காட்டலாம்.


புதிய வீடியோ