உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேராசிரியர் தம்பதியிடம் கொள்ளையடித்த இருவர்

பேராசிரியர் தம்பதியிடம் கொள்ளையடித்த இருவர்

அசோக் விஹார்: டில்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், அசோக் விஹாரில் தன் மனைவியுடன் வசிக்கிறார். கடந்த மாதம் 17ம் தேதி பேராசிரியர் வீட்டுக்குள் நுழைந்த ஒரு கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியை மிரட்டி, கட்டிப்போட்டது.பின், வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள், பணம், மொபைல் போன் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு, பேராசிரியரின் காரில் தப்பிச் சென்றனர்.புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, உத்தர பிரதேசத்தின் கவுதம் புத் நகரைச் சேர்ந்த சூரஜ் என்கிற அகில், 32, சச்சின், 29, ஆகிய இருவரை கைது செய்தனர்.பேராசிரியர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த சச்சினின் காதலி கொடுத்த தகவலின்படி, கொள்ளையை அவர்கள் அரங்கேற்றியது, விசாரணையில் தெரிய வந்தது.பேராசிரியரின் கார் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ