உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இருவர் சுட்டுக்கொலை கொலையாளிக்கு வலை

இருவர் சுட்டுக்கொலை கொலையாளிக்கு வலை

புதுடில்லி:வடகிழக்கு டில்லியில் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவர்களை போலீசார் தேடுகின்றனர். வடகிழக்கு டில்லி பிரதாப் நகர் சி பிளாக்கில் வசித்த சுதிர் என்ற பண்டி,35, ராதே பிரஜாபதி,30 ஆகிய இருவரையும், நேற்று முன் தினம் இரவு, 7:00 மணிக்கு சிலர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். தகவல் அறிந்து வந்த ஹர்ஷ் விஹார் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு, ஜி.டி.பி., மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். தனிப்படை போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை