உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுக்குமாடி காவலர்களை தாக்கிய குடியிருப்போர் இருவர் கைது

அடுக்குமாடி காவலர்களை தாக்கிய குடியிருப்போர் இருவர் கைது

நொய்டா,:புதுடில்லி அருகே, கிரேட்டர் நொய்டா அடுக்குமாடி குடியிருப்பில், அங்கு வசிப்போருக்கும் காவலாளிகளுக்கும் ஏற்பட்ட தகராறில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டா 'அம்ரபாலி லீஷர்' அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இருவர் காரில் நேற்று முன் தினம் மாலை வந்தனர்.ஆனால், அவர்கள் வந்த காரில், அடுக்குமாடி குடியிருப்பின் 'ஸ்டிக்கர்' ஒட்டப்படவில்லை. எனவே, விதிமுறைப்படி அந்தக் காரை உள்ளே விட முடியாது என காவலர்கள் தடுத்தனர்.காரில் இருந்த இருவருக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. தாங்கள் இருவரும் இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். ஆனால், காவலர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இந்தச் சண்டையை சிலர் மொபைல் போனில், 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.இந்நிலையில், தாங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாக காவலர்கள், பிஷ்ராக் போலீசில் புகார் செய்தனர். சம்பவத்தின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் சிங், வழக்குப் செய்து, அந்தக் காவலர்களைத் தாக்கிய குடியிருப்புவாசிகள் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை