உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உறைவிட பள்ளியில் காணாமல் போன இரு மாணவர்கள் மங்களூரில் மீட்பு

உறைவிட பள்ளியில் காணாமல் போன இரு மாணவர்கள் மங்களூரில் மீட்பு

சிக்கமகளூரு: கேகூர் கிராமம் அருகில் உள்ள உறைவிட பள்ளியில் இருந்து, மாயமான இரண்டு மாணவர்கள், மங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டனர்.சிக்கமகளூரு புறநகரின் தேகூர் கிராமத்தின் அருகில் அப்துல் கலாம் உறைவிட பள்ளி உள்ளது. இங்கு பெங்களூரு மற்றும் பாளஹொன்னுாரை சேர்ந்த 14 வயது இரு மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர். இருவரும் நல்ல நண்பர்கள்.ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததால், 10ம் வகுப்புக்கான சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன. எனவே விடுமுறை அளிக்கப்படவில்லை.இரண்டு மாணவர்களும், மார்ச் 3ம் தேதி இரவு சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்து, உறைவிட பள்ளியில் இருந்து ஓடிவிட்டனர். காலையில் மாணவர்கள் இல்லாததை கவனித்த உறைவிட பள்ளி ஊழியர்கள், சிக்கமகளூரு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.மாணவர்களை கண்டு பிடிக்க, போலீசாரும் தனிப்படை அமைத்தனர். உறைவிட பள்ளி சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். சிக்கமகளூரு பஸ் நிலையத்தில், இரண்டு மாணவர்களும் பஸ்சுக்காக காத்திருந்தது, பெங்களூரு பஸ்சில் ஏறிச் சென்றதும் தெரிந்தது.அதன்பின் பெங்களூரின் பல இடங்களில் தேடினர்; கிடைக்கவில்லை. மங்களூருக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அங்கு தேடியபோது நேற்று முன் தினம் மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை போலீசார் மீட்டு, சிக்கமகளூருக்கு அழைத்து வந்தனர்.படிப்பில் ஆர்வம் இல்லாததால், உறைவிட பள்ளியில் இருந்து தப்பியுள்ளனர். மங்களூரில் ஹோட்டலில் வேலை தேடியது விசாரணையில் தெரிந்தது.மாணவர்களுக்கு புத்திமதி கூறிய போலீசார், உறைவிட பள்ளிக்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை