மேலும் செய்திகள்
விமர்சனங்களால் துவண்டபோது ஆறுதலாக இருந்தார்!
03-Jan-2025
நெலமங்களா: பெங்களூரு ரூரல் நெலமங்களாவின் அஞ்சனா நகரில் வசிப்பவர் ரவி, 45. இவர் ருக்மிணி, 38, என்ற பெண்ணை காதலித்தார். பெற்றோரின் வற்புறுத்தலால், லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளன.ருக்மிணிக்கும் வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. பின் கணவருடன் ஒத்துப்போகாமல் விலகி வந்துவிட்டார்.லட்சுமி, சில மாதங்களுக்கு முன்பு காலமானார். எனவே தன் முன்னாள் காதலி ருக்மிணியை, தன் வீட்டுக்கு ரவி அழைத்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாராகினர்.இதற்கிடையே லட்சுமியின் அக்கா பாக்யா, 40, என்பவரும் ரவியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். “என் தங்கை குழந்தைகளை நான் பார்த்துக் கொள்வேன். என்னையே திருமணம் செய்ய வேண்டும்,” என பிடிவாதம் பிடிக்கிறார். பாக்யாவும் திருமணமானவர்தான். தங்கை கணவரை திருமணம் செய்வதற்காக, தன் கணவரை விட்டு விட்டு ஓடிவந்தவர்.ருக்மிணி, ரவியின் வீட்டில் இருப்பது, பாக்யாவுக்கு தெரிந்தது. கோபமடைந்த பாக்யா நேற்று காலை அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது, ரவி வேலைக்குச் சென்றிருந்தார்.வீட்டில் ருக்மிணி தனியே இருந்தார். ருக்மிணிக்கும், பாக்யாவுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. பரஸ்பரம் திட்டிக் கொண்டனர். உருட்டுக் கட்டையால் அடித்துக் கொண்டனர்.ஒரு கட்டத்தில் பாக்யா, கத்தியால் ருக்மிணியை குத்தினார். தகவலறிந்து அங்கு வந்த நெலமங்களா போலீசார், காயமடைந்த ருக்மிணியை மருத்துவமனையில் சேர்த்தனர். பாக்யாவை கைது செய்தனர்.
03-Jan-2025