வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள் ???
புதுடில்லி: கடல் வழி பயணமாக உலகம் முழுவதும் சுற்றி வரும் பயணத்தை இந்திய கப்பல்படை பெண் அதிகாரிகள் விரைவில் துவங்க உள்ளதாக கப்பல் படை செய்திதொடர்பாளர் கமாண்டர் விவேக் மாதவால் தெரிவித்தார் .லெப்டினட் கமாண்டர் ரூபா , லெப்டினட் கமாண்டர் தில்னா ஆகிய இருவரையும் கடல்வழியாக உலகம் சுற்றிவர கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சாகர் பரிக்கீரமா என்ற பயிற்சியில் திறமை மேம்படுத்துதல், உளவியல் ரீதியிலான பிரச்னைகள், மற்றும் மன தைரியம் என பல கடின பயிற்சிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. 'கோல்டன் குளோப் ரேஸ்' ஹீரோ, ஓய்வுபெற்ற கமாண்டர் அபிலாஷ் டோமியின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். 6 பேர் கொண்ட பயிற்சி குழுவில் இடம்பெற்ற டோமி , கோவாவிலிருந்து கேப் டவுன் வழியாக ரியோ டி ஜெனிரோவிற்கு கடந்த ஆண்டு கடல் பயணத்தில் பங்கேற்றவர்.கடல் பயணத்திற்கென 2 பெண் அதிகாரிகளுக்கும் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இவர்களுக்கென ஐஎன்எஸ் கப்பல் தாரிணி தயார் நிலையில் உள்ளது. விரைவில் கடல் பயணத்தை துவக்கவிருக்கும் இந்திய அதிகாரிகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ???