உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு: போராட்டம் அறிவித்த உத்தவ் தாக்கரே

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு: போராட்டம் அறிவித்த உத்தவ் தாக்கரே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக உத்தவ் தாக்கரே போராட்டத்தை அறிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் பரம வைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி, செப்..14ம் தேதி நடக்கிறது.ஆனால் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம், இந்திய எல்லையில் பாக். ஆதரவு பயங்கரவாத இயக்கங்களின் அத்துமீறல் ஆகியவற்றை முன்வைத்து பாகிஸ்தானுடன் ஏன் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்று கேள்விகளும், கொதிப்பும் எழுந்து வருகிறது.பாகிஸ்தானுடன் இந்தியா மோதக்கூடாது என்று குரல்கள் எழுந்து வரும் சூழலில், போட்டியை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது: ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாயாது என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் இப்போது எப்படி இவை இரண்டும் ஒன்றாக பாயும்? போரும், கிரிக்கெட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? அவர்கள் தேசப்பற்று என்று கூறி வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் நாளைய போட்டியில் விளையாட இருக்கின்றனர். இந்த ஆட்டத்தின் மூலம் பணத்தை சம்பாதிக்க உள்ளனர்.நாளை(செப்.14) சிவசேனா மகளிர் அணியினர் மஹாராஷ்டிரா தெருக்களில் இறங்கி போராடுவர்.இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

நிக்கோல்தாம்சன்
செப் 13, 2025 21:47

இந்த விஷயத்தில் தாக்கரே உடன் நான் கருத்து உடன்படுகிறேன்


திகழும் ஓவியன், Ajax Ontario
செப் 13, 2025 20:51

விட்டா மகாராஷ்டிரா வுக்கு இவங்கதான் சுதந்திரம் வாங்கி குடுத்தது அப்டின்னு அடிச்சு விடுவார்கள்...


vadivelu
செப் 14, 2025 07:21

நம்ம ஊர் மாநில கட்சிகள் மாதிரி ..


Natarajan Ramanathan
செப் 13, 2025 20:39

துபாயில் உள்ள இந்தியர்கள் எவருமே இந்த போட்டியை பார்க்காமல் தவிர்த்தாலே போதும்.


rajasekaran
செப் 13, 2025 19:51

உத்தவ் தாக்கரே அவர்களே உங்களுக்கு மானம் , சூடு , சொரணை இருந்தால் ராகுல் காந்தியை போராட்டத்துக்கு கூப்பிட்டு பார். அவர் வந்தால் போராட்டம் நடத்து. இல்லை என்றால் ராகுல் காந்தி மேல் ஒரு காட்டம் காட்டி பார்.


nagendhiran
செப் 13, 2025 18:27

திருமணம் நிற்குதானு பார்ப்போம்?


nagendhiran
செப் 13, 2025 18:26

நாற்காலிக்கு ஆசைப்பட்டு உங்கொப்பன் உருவாக்கிய"சாம்ராஜியத்தை அழிக்க காங்கிரஸோடு கூட்டணி வைதுட்டு இவணுக்கு பேச்சை பாருங்க?


Vasan
செப் 13, 2025 18:21

Shri. Amit Shah ji, Please tell your son to boycott the cricket match against Pakistan, and let both the teams share the points. Even if they reach finals, let the Asia Cup be shared by the 2 countries. Country first. BCCI and Cricket next.


KOVAIKARAN
செப் 13, 2025 17:57

இதைப்பற்றி நான் ஏற்கனவே ஒரு கருத்து பதிவு செய்துள்ளேன் அது நமது தினமலரில் வாசகர் கருத்துப்பகுதியில் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இது. நமது கிரிக்கெட் அணி நாளை 14.9.2025 அன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானுடன் போட்டியிட தடை விதிக்கப்பட்டால் அவர்களுக்கு 2 புள்ளிகள் குறைவாகக் கிடைக்கும். இருப்பினும் அவர்கள் மற்ற அணிகளை வென்று, இறுதி போட்டிக்கு ஆட்டத்திற்கு நிச்சயமாக வருவார்கள். அதேபோன்று, பாகிஸ்தானும் இறுதி போட்டியில் இந்தியாவை நிச்சயமாக எதிர்கொள்ளும். இந்தியா இறுதிப்போட்டியிலும் போட்டியிட தடை விதிக்கப்பட்டால், பாக்கிஸ்தான் கோப்பை வென்றதாக அறிவிக்கப்படும். இதுதான் கிரிக்கெட் விதிகள். அப்படியென்றால், இந்தப் போட்டிகளை ஏன் BCCI நடத்த வேண்டும்? நமது நாட்டிலிருந்து இந்தப் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்படும்போதே, இன்று கூவும் நேசப்பற்றாளர்கள் ஏன் அதற்காக போராடி, இந்த போட்டிகளை ரத்து செய்ய முயலவில்லை. அப்படிச் செய்திருந்தால், அவர்களை நாம் பாராட்டலாம். ஏற்கனவே உச்ச நீதிமன்றம்,இந்தப் போட்டிக்கு தடைவிதிக்க முடியாது, அது சர்வதேச விளையாட்டு விவகாரம் என்று கூறிவிட்டது. இந்தப் போட்டியை நேரிலோ அல்லது தொலைக்காட்சியில் நேரலையாகவோ எவரும் பார்க்கவேண்டாம் என்று அறைகூவல் விடலாமே.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 13, 2025 17:41

தாக்ரே ஜி ,நம்ம பிஜேபி தல எலேச்டின் வந்தா பீலா உடும் ,


Sundar R
செப் 13, 2025 16:51

Uddhav Thackeray Ji should send two boxes of bangles each to the leaders of the two Communist Parties in Tamil Nadu. Since they are frightened by the Karunainidhis Family and because of the fear, the Communists in Tamil Nadu never even one dhwara in nine dhwaras in last four years counting from 2021. Teachers, Nurses, Doctors, Transport Workers and even Sanitary Workers of Chennai Corporation came to the streets and conducted several agitations to achieve their demands and the DMK government has done nothing to the cause of the agitating work force.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை