உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனையில் உத்தவ் தாக்கரே! என்னாச்சு... கவலையில் தொண்டர்கள்

மருத்துவமனையில் உத்தவ் தாக்கரே! என்னாச்சு... கவலையில் தொண்டர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை; மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.2012ம் ஆண்டு உத்தவ் தாக்கரேவுக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதற்கான ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு 8 ஸ்டென்ட்டுகள் வைக்கப்பட்டன.அதன் பிறகு 2016ம் ஆண்டில் ஒரு முறை ஆஞ்சியோ சிகிச்சையை உத்தவ் தாக்கரே எடுத்துக்கொண்டார். இந்நிலையில் உத்தவ் தாக்கரே மீண்டும் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு இதய தமனிகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்று பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு உள்ளனர். உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் இருக்கும் விவரம் அறிந்த தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.அதே நேரத்தில் விரைவில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்று, உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இன்றே உத்தவ் தாக்கரே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நசி
அக் 14, 2024 22:00

நம்பிககை துரோகம் பரிசு.....சுயநல குடும்பங்களை‌கடவுள் களையெடுக்கிறார்


RAMAKRISHNAN NATESAN
அக் 14, 2024 18:54

மேற்குவங்க அம்மையார் நடத்தியது போல இதுவும் நாடகமாக இருக்கலாம் .........


nagendhiran
அக் 14, 2024 18:16

தேர்தல் நேரம் வந்தாலே இப்படிதான்? இது மாதிரிதான் மம்தாவும் செய்தாங்க?


raja
அக் 14, 2024 17:01

இப்படித்தான் ரட்டன் டாடா வுக்கும் சொன்னார்கள்...


saravan
அக் 14, 2024 16:58

இதுக்குதானா


Tiruchanur
அக் 14, 2024 16:57

போயி சேர்ந்தால் நாட்டுக்கு நல்லது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை