வாசகர்கள் கருத்துகள் ( 11 )
யு ஜி சி யும் ஒன்றிய அரசும் கல்வியை நாசமாக்குகின்றனர். +2 வில் commerce group படித்து விட்டு எப்படி இன்ஜினியரிங் சேர முடியும்? அல்லது +2வில் maths group படித்தவனால் B. Com ல் எப்படி சேர முடியும்? 2 ஆண்டுகளிலும் commerce பாடங்களுக்கு பதில் Engg Entrance கோச்சிங் சென்டரில் சேர்ந்து physics, chemistry படிப்பானா? இதெல்லாம் யோசித்து எழுதி என்ன பயனும் இல்லை. பாஜக இதற்கெல்லாம் பதிலும் சொல்லாது. கல்லூரிப் பக்கமே போகாத, படிக்கிற வயசில் பிள்ளைகள் இல்லாத பாஜக வினர் இதை ஆதரித்து எழுதி விடுவார்கள். அப்படியே உறவுகளில் படிக்கிற பிள்ளைகள் யாருக்கேனும் இருந்தாலும் அவர்களை பட்டப் படிப்புற்கு அயல் நாட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அதனால் இங்கே இதெல்லாம் ஆதரிப்பார்கள்.
பள்ளியில் சயின்ஸ் குரூப் எடுத்த என்னுடைய மகள் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார். ஆனால் அவர் இப்போது வேலை செய்வது ஐ.டி. துறையில். நானும் கூட ஒரு உதாரணம். 1978-80-இல் பிளஸ் 2-வில் முதல் பாட்ச் கணக்கு, வரலாறு, புவியியல் படித்து, தொலைதூர கல்வியில் வணிகவியல் படித்து, சம்பந்தமே இல்லாமல் கம்ப்யூட்டர் துறையில் 30 ஆண்டுகள் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் எனப் பல நாடுகளில் குப்பை கொட்டியவன்.
எனக்குத் தெரிந்து என்ஜினீயரிங், MBBS, பார்மசி படித்தவர்கள் பின்னாளில் சட்டப் பட்டமும் பெற்றுள்ளனர். உங்களது பழம் பஞ்சாங்க அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவும்.
ஒரே துறையில் ஈடுபட்டால்தான் வாழ்க்கையில் துறைசார் மனத்திருப்தியையும், நிபுணத்துவத்தையும் அடைய முடியும் ...... விளங்காத மத்திய கல்வித்துறை .....
என்ஜினீயரிங் படித்த சுஜாதா அவர்கள் வாக்கு இயந்திரத்தை உருவாக்கியது மட்டுமல்ல. நரம்பியல் பற்றியும் புத்தகம் எழுதினார். நாவல், சினிமா கதை வசனமும் எழுதினார். இப்போதும் பல்துறை நிபுணர்கள் பலர் உள்ளனர்.
தன்னுடைய துறை சாராத துறைகளில் படைப்புக்களை எழுதுவதற்கு அதிகம் படிப்பார்கள் ..... அதற்காக அவர் அத்துறையிலும் நிபுணர் ஆகிவிட்டார் என்று பொருளல்ல ....
மருத்துவம் யு. ஜி. சி. யின் கீழ் வராது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஒரு கருத்து.
+2 வில் அறிவியல் எடுத்தவன் இளங்கலையில் வணிகம் எடுத்து படிக்கலாம் , ஆனால் +2 வில் வணிகம் எடுத்தவன் இளங்கலையில் அறிவியல் எடுக்க முடியுமா?
முடியும். பள்ளியில் படிப்பது வெறும் அடிப்படைகள்தான். பள்ளிப்பருவ வயதைக் கடந்த ஒரு மாணவன் தனிப்பட்ட முறையில் முயற்சித்து பள்ளியில் அறியும் அடிப்படை அறிவியல் அறிவை ஒருசில மாதங்களில் பெற முடியும். கல்லூரியில் நுழைவுத் தேர்வை எழுதவும் முடியும், கல்லூரியில் அறிவியல் துறையில் மேல் படிப்பிற்காக சேரவும் முடியும். அந்த வாய்ப்பை எல்லா மாணவர்களுக்கும் வழங்குவதுதான் சரியும் கூட.
ஓ ...அப்போ பொறியியலில் இளங்கலை படித்து முதுகலையில் இதய நோய் மருத்துவம் படிக்கலாமா...அட கூமுட்டைகளா.
அருமை, அருமை. நல்ல மாற்றம். வருக, வருக என வரவேற்கிறோம்.