உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்கள் கவனம்: நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள்

மாணவர்கள் கவனம்: நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.யுஜிசி வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டு பட்டியலின்படி தலைநகர் டில்லியில் தான் அதிகமான போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்கு மட்டுமே 10 போலி பல்கலை. இருக்கிறது.யுஜிசி வெளியிட்டுள்ள போலி பல்கலை. முழு பட்டியல் இதோ; டில்லி; 1. அகில இந்திய பொது மற்றும் உடற்கல்வி அறிவியல் நிறுவனம், (AIIPHS) அலிப்பூர் 2.வணிக பல்கலைக்கழகம்(Commercial University) தார்யாகஞ்ச் 3. யுனைடெட் நாடுகள் பல்கலைக்கழகம் (United Nations University) 4. வொகேஷனல் பல்கலைக்கழகம்(Vocational University) 5. ஏடிஆர் மத்திய நீதித்துறை பல்கலை (ADR Centric Juridical University) ராஜேந்திரா பிளேஸ்6. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம், புதுடில்லி 7.விஸ்வகர்மா சுயதொழில் திறந்தவெளி பல்கலை, சஞ்சய் என்கிளேவ் 8. ஆன்மீக பல்கலை, ரோஹிணி9. ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி பல்கலை.(WPUNU), பிதாம்புரா10. மேலாண்மை மற்றும் பொறியியல் நிறுவனம், கோட்லா, முபாரக்பூர் போலி பல்கலை. பட்டியல் 2ம் இடத்தில் உ.பி. இருக்கிறது. அங்குள்ள போலி பல்கலை. பட்டியல்; 1. காந்தி ஹிந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத் 2. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தவெளி பல்கலை. அலிகார்3. பாரதிய ஷிக்ஷா பரிஷத் பாரத் பவன், மாத்யாபுரி, லக்னோ 4. மகாமாயா தொழில்நுட்ப பல்கலை. நொய்டா ஆந்திரா; 1. கிறிஸ்து புதிய ஏற்பாடு நிகர்நிலை பல்கலை. குண்டூர் 2. இந்திய பைபிள் திறந்தவெளி பல்கலை. விசாகப்பட்டினம் கேரளா; 1.சர்வதேச இஸ்லாமிய தீர்க்கதரிசன மருத்துவ பல்கலை.(IIUPM), கோழிக்கோடு 2. செயிண்ட் ஜான்ஸ் பல்கலை. கிஷன்நட்டம் மேற்கு வங்கம்:1. இந்திய மாற்று மருத்துவ அறிவியல் பல்கலை. கோல்கட்டா 2. இந்திய மாற்று மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலை. தாகூர்புகூர், கோல்கட்டா.மஹாராஷ்டிரா; 1, ராஜா அராபிக் பல்கலை. நாக்பூர் புதுச்சேரி;1. ஸ்ரீபோதி அகாடமி உயர்கல்வி நிலையம், திலாஸ்பேட், வழுதாவூர் சாலை மேற்கண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் எந்த அங்கீகாரமும் பெறவில்லை. 1956ம் ஆண்டு யுஜிசி சட்டத்தின் பிரிவு 2(f) அல்லது 3ன் கீழ் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற மோசடியான கல்வி நிறுவனங்களில் சேரும் முன்பு பல்கலை. மானியக்குழுவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்க்குமாறு யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAJ
அக் 28, 2025 08:11

சரி சார் ...படுகஷ்டப்பட்டு கண்டுபிடிச்சுட்டீங்க... அடுத்து உங்க டக்கு?


Gokul Krishnan
அக் 28, 2025 07:59

போலி பல்கலைக்கழகம் போலி மருத்துவர் போலி சிபிஐ அதிகாரி போலி போலீஸ் போலி சுங்க கட்டணம் போலி சாமியார் போலி கஸ்டம்ஸ் போலி வக்கில் அரசும் அரசியல் வியாதிகள் மட்டுமே உண்மை ஏன் என்றால் இந்த ரெண்டும் மக்களை சுரண்டுவதற்கு


சாமானியன்
அக் 28, 2025 07:36

செய்தி குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வளவு போலி பல்கலைக்கழகங்களா? பட்டியல் வருகின்றது. மூடப்படவில்லை. UGC நெறிமுறைகள் பின்பற்றப் படுவதில்லையா ? என்னதான் நடக்கிறது ? மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விரிவான பதில் அளிப்பது நல்லது.


Bhaskaran
அக் 28, 2025 03:16

எழுபதுகளில் டெல்லியில் கமர்ஷியல் யுனிவர்சிட்டி என்ற ஒரு பல்கலைக்கழகம் இருந்தது .அதனிடம் அனுமதி வாங்கி தூத்துக்குடி மாவட்டம் கீழ் அருணாசலபுரம்கிராமத்தில் ஒருவர் டுடோரியல் கல்லூரி நடத்திவந்தார்.அவரிடம் நிறையபேர் பணம் கட்டி அங்கேயே புத்தகம் பார்த்து பரிட்சை எழுதி பட்டம் வாங்கினார்கள்.என் அண்ணாவின் நண்பர் அவர் எங்கள் வீட்டுக்கு வருவார் என்னையும் பிகாம் பரிட்சை எழுத சொன்னார் .ஒரேநாளில் அந்த ஊருக்கு சென்று பரிட்சை எழுதினேன் பல ஊர்களில் இருந்து வந்து தேர்வு எழுதினார்கள் .பறகு தேர்ச்சி யடைந்த தாக சொன்னார் 2000 ரூபாய் கொடுத்தால் பட்டம் நான் வாங்கவில்லை . அவர் 80 நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார் விளம்பரத்துக்காக .அந்த பட்டம் வைத்து தமிழக அரசு வேலையும் பலர் வாங்கினார்கள்..பிறகு மத்திய அரசு அந்த யுனிவர்சிட்டி அங்கீகாரமற்றது பட்டங்கள் செல்லாது என்று அறிவித்தது


Ramesh Sargam
அக் 27, 2025 23:22

போலி என்று தெரிந்தும், ஏன் அவற்றை இழுத்து மூடவில்லை? பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற நிலையா? பல்கலைக்கழக மானியக்குழு யுஜிசி ஏன் அதை செய்யக்கூடாது அல்லது அவர்களுக்கு அதிகாரம் இல்லையென்றால் மத்திய அரசிடம் அல்லது உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டு அந்த போலி பல்கலைகழகங்களை இழுத்து மூடலாமே எனக்கு தெரிந்து அவைகள் எல்லாம் ஊழல் அரசியல்வாதிகள் அல்லது அரசியல் ஆதரவுடையவர்கள் நடத்தும் பல்கலைக்கழகங்களாக இருக்கும். அவைகளை இழுத்துமூட சம்பந்தப்பட்ட துறையினர் அல்லது அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், மாணவர்கள் வாழ்க்கை மேல் அக்கறைகொண்டு.


Rajan A
அக் 27, 2025 22:03

போலினு பட்டியல் வெளியிட்டால் போதுமா? அந்த நிறுவனைத்தை மூடிவிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டியது தானே. இதற்கு எதற்கு யூஜிசி? இதையும் இழுத்து முட வேண்டும்


R Dhasarathan
அக் 27, 2025 21:22

இளம் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்.


பிரேம்ஜி
அக் 27, 2025 20:20

வெட்கமாக இருக்கிறது இந்த மாதிரி செய்திகள் பார்க்க! எல்லாம் போலி இந்த நாட்டில்! கேட்க நாதியில்லை!


முக்கிய வீடியோ