உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் 6 மாவட்டங்களில் 12 இடங்களை நோட்டமிட்ட பயங்கரவாதி உமர்; தோண்டத் தோண்ட வெளிவரும் தகவல்கள்

டில்லியில் 6 மாவட்டங்களில் 12 இடங்களை நோட்டமிட்ட பயங்கரவாதி உமர்; தோண்டத் தோண்ட வெளிவரும் தகவல்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செங்கோட்டை கார் குண்டுவெடிப்புக்கு முன்பாக தலைநகர் டில்லியில் 12 இடங்களை பயங்கரவாதி டாக்டர் உமர் நோட்டமிட்டு சென்றுள்ள விவரத்தை சிசிடிவி காட்சிகள் மூலம் புலனாய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.தலைநகர் டில்லியில் செங்கோட்டை அருகே பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பில் விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி டாக்டர் உமர் மற்றும் அவனின் கூட்டாளிகள் காரில் எங்கு எல்லாம் சென்று வந்துள்ளனர்? யாரை சந்தித்துள்ளனர் என்ற விவரங்களை விசாரணைக் குழுவினர் சேகரித்துள்ளனர்.அந்த விவரங்கள் பின் வருமாறு; டில்லியில் குண்டுவெடிப்பை அரங்கேற்றும் முன்பாக வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதி டாக்டர் உமர் வலம் வந்துள்ளான். 12 இடங்களை பார்க்க அவன் சென்றிருப்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது.சுபாஷ் பிளேஸ், அசோக் விஹார், கன்னாட் பிளேஸ், ரஞ்சித் மேம்பாலம், டிலைட் சினிமா, ஷாஹீத் பகத் சிங் மார்க் மற்றும் ரோஹ்தக் சாலை ஆகிய இடங்களை சுற்றி உள்ளான். வடக்கு டில்லிக்கும் சென்று வந்திருக்கிறான். அங்கு காஷ்மீரி கேட், தரியாகஞ்ச் மற்றும் செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்குச் சென்று திரும்பியிருக்கிறான். இந்த இடங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள்.விசாரணையை திசை திருப்பவோ அல்லது அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் எப்படி உள்ளன என்பதை அறிய போயிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.டில்லி கார் குண்டுவெடிப்பின் முக்கிய ஆதாரமாக விசாரணைக் குழுவின் கைகளில் பதர்புர் டோல்கேட் சிசிடிவி கேமரா காட்சிகள் சிக்கி இருக்கிறது. இந்த ஒரேயொரு தடயம் குண்டு வெடிப்பின் பின்னணியில் உள்ள அனைத்து விஷயங்களையும் வெளிக்கொண்டு வர காரணமாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

oviya vijay
நவ 13, 2025 01:06

அவனின் குடும்பத்தினர் மீது bulldozer ஏற்றி நிர்மூலம் செய்ய வேண்டும்


Ramesh Sargam
நவ 13, 2025 00:15

அந்த குலத்தினர் மண்ணில் இருக்கிறவரைக்கும், மனிதகுலத்துக்கு ஆபத்துதான். அவர்கள் அனைவரும் கூண்டோடு அழிக்கப்படவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை