உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை

டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை

புதுடில்லி: டில்லி மாவட்ட நீதிமன்ற சிறையில் விசாரணைக் கைதியை, மற்ற இரண்டு கைதிகள் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டில்லியில் உள்ள சாகேத் சிறையில் இருந்த அமன் என்பவர் கொல்லப்பட்ட கைதி ஆவார். இவருக்கும், கொலை செய்த கைதிகளுக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.கூடுதல் துணை ஆணையர் (தெற்கு) சுமித் குமார் ஜா கூறியதாவது:இன்று காலை 10 மணியளவில், சாகேத் நீதிமன்றத்தில் இரண்டு முதல் மூன்று கைதிகளுக்கு இடையே சண்டை நடந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.கோவிந்த்புரியைச் சேர்ந்த அமன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதைக் கண்டோம். அவர் ஜிதேந்தர் மற்றும் ஜெய்தேவ் ஆகியோருடன் சண்டையில் ஈடுபட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு சுமித் குமார் ஜா கூறினார்வழக்கறிஞர் சங்கத் தலைவர் அனில் பசோயா கூறுகையில், '2024ம் ஆண்டில், அமன், ஜிதேந்தர் மற்றும் அவரது சகோதரரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மூன்று கைதிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் அமன் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஆயுதம் எதுவும் இல்லை. இது கண்டிக்கத்தக்க சம்பவம். இது கோர்ட் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

madhesh varan
ஜூன் 05, 2025 18:44

சங்கிகள் வாங்க, வந்து சப்பைக்கட்டு காட்டுங்க, முட்டுகொடுக்க ஒருத்தரையும் காணோம்


Ramesh Sargam
ஜூன் 05, 2025 20:24

தமிழகத்தில் தினம் தினம் கொலை. தினம் தினம் திக் திக் நொடிகள். அங்குள்ள முதல்வரை நீங்க கேள்வி கேட்கமுடியுமா?


முக்கிய வீடியோ