உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அப்படியே இருக்குது வேலையில்லா திண்டாட்டம்: அகிலேஷ் யாதவ் பேட்டி

அப்படியே இருக்குது வேலையில்லா திண்டாட்டம்: அகிலேஷ் யாதவ் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'வேலையில்லா திண்டாட்டம் அப்படியே உள்ளது. இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள்' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அகிலேஷ் யாதவ் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஹாத்ரஸ் சம்பவத்தில் அரசு தனது தோல்வி என்பதை ஒப்புக்கொண்டது. அதனால் தான் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அரசின் தவறான நிர்வாகத்தால், இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதை காட்டுகிறது.உ.பி.யில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவோம் என கூறியவர்கள், அவர்களின் ஸ்மார்ட் சிட்டியை பார்க்கலாம். எங்கு பார்த்தாலும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் மோசமாக இருப்பதால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. சுகாதார வசதிகளும் மோசமாகிவிட்டன. வேலையில்லா திண்டாட்டம் அப்படியே உள்ளது. இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

theruvasagan
ஜூலை 11, 2024 09:51

வேலை வெட்டி இல்லாததால் ஒரு பார்ட்டி சின்னக் குழந்தையோட கேம் விளையாடிட்டிருக்கு.


sankar
ஜூலை 10, 2024 21:32

உண்மைதான் - பப்புவும், இந்த மூக்கனும் வேலை இல்லாம வெட்டியாத்தானே இருக்காங்க


வாரிசு மட்டுமே
ஜூலை 10, 2024 21:08

இருக்காதா பின்னே. உன்ன மதிரி ஸ்டேட்க்கு ஒருத்தர் வாரிசுக்கு மட்டும் வளர்த்து வந்தால்...?


KRISHNAN R
ஜூலை 10, 2024 20:47

உண்மை தான். 2014 .. ககு...... முன்னரும்


தாமரை மலர்கிறது
ஜூலை 10, 2024 20:23

வேலைக்கு ஆள் கிடைக்காமல் முதலாளிகள் கஷ்டப்படுகிறார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதை அபிரிதமான ஜிஎஸ்டி வரிவசூல் காட்டுகிறது. படித்து முடித்தவுடனே ஐடி மாணவர்கள் ரெண்டு மூன்று லட்சக்கணக்கில் சம்பாரிக்கிறார்கள். மக்களின் பாக்கெட்டில் பணம் நிரம்பி வழிகிறது என்பதை மார்க்கெட்டில் பணம் புழங்குவதை கொண்டு பார்க்கலாம். வேலை இல்லாமல் இருக்கும் இரு இளைஞர்கள் ராகுல் மற்றும் அகிலேஷ் மட்டுமே. ஒருவருக்கு முதல்வர் வேலை இருந்தும் ஜெயிலில் தான் இருப்பேன் என்று அடம்பிடிக்கிறார்.


Sundar R
ஜூலை 10, 2024 18:47

சமாஜ்வாதி கட்சி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த சமயங்களில் முலாயம் சிங்கையும் சேர்த்து சட்டம் ஒழுங்கு இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் எப்போதுதான் இந்த ஆட்சி போகுமோ என்று இருந்தது. அகிலேஷ் சொல்றார். மக்கள் கேட்போம்.


தத்வமசி
ஜூலை 10, 2024 18:07

பல மாநிலங்களில் பிஜேபி ஆட்சியில் இருக்கிறது. அதனால் அங்குள்ள எதிர்கட்சித் தலைவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். உண்மை தான். இது இப்படியே நீடிக்கட்டும்.


Ramesh Sargam
ஜூலை 10, 2024 17:36

வடிவேலு பட காமெடி போல, இவருக்கு வேலை எதுவும் இல்லை. அத இப்படி பேசி சமாளிக்கிறார்.


விகா
ஜூலை 10, 2024 17:33

fraud


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி