உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

 மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லி.,யில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், கடந்த 28ல், பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இந்நிலையில், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் இன்று காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட். இதன் மூலம், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார். அது மட்டுமின்றி, நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாமில், ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள், நிதி தொகுப்புகள் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நடுத்தர வர்க்கத்தினரை கவரும் வகையில் கவர்ச்சி அறிவிப்புகளும் இடம் பெறலாம் என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை