உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல் அச்சுறுத்தல் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

நக்சல் அச்சுறுத்தல் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: ''சத்தீஸ்கரில், 2026 மார்ச் 31க்குள் நக்சல்களின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உறுதி ஏற்றுள்ளன,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில போலீசாருக்கு விருது வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:சத்தீஸ்கரில் கடந்த ஓராண்டில் 287 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 837 பேர் சரணடைந்துள்ளனர். நாட்டின் பல்வேறு பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து சத்தீஸ்கர் போலீசார் கடந்த ஓராண்டில் இந்த பணியை திறம்பட செய்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக நக்சல் பயங்கரவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஓராண்டில் 100க்கும் குறைவாக குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த 10 ஆண்டுகளில் நக்சல் அச்சுறுத்தல்களை வெகுவாக குறைத்துள்ளது.மாநிலத்தில், நக்சல் அச்சுறுத்தல்களை வெகுவாக குறைக்க மாநில அரசு உறுதி ஏற்றுள்ளது. இதற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கும். 2026 மார்ச் 31க்குள் நக்சல் அச்சுறுத்தல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.சரணடையும் நக்சல்களின் மறுவாழ்வுக்கு, அரசு மிகச் சிறந்த கொள்கைகளை வகுத்துள்ளது. எனவே, வன்முறையை கைவிட்டு நக்சல்கள் சரணடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

veera
டிச 16, 2024 13:20

இந்த அப்பாவிகு மட்டும் எதுவும் கிடையாது..


அப்பாவி
டிச 16, 2024 10:44

நக்சல்களின் இயக்கம் ஏன் ஆரம்பிக்கப் பட்டது? எதுக்காக தொடர்கிறது? இன்றும் மக்கள் மேல் வர்க்கத்தவரால் சுரண்டப்படுவதைத்தான் அது காட்டுகிறது. அதைப் பத்தி யோசிக்காமல் தீவிரவாரத்தை ஒழிப்போம்னு தேதி குறிச்சுக்கிட்டே காலத்தை ஓட்டுங்க.


அப்பாவி
டிச 16, 2024 08:20

எதுக்குங்க 2025, 26ந்னுட்டு. பேசாம 2047, 3025 க்குள்ளே ஒழுச்சிருவோம்னு சொல்லுங்க. பேப்பரில் வேறு நியூஸ் போடலாம்.


A.C.VALLIAPPAN
டிச 16, 2024 09:49

can you please ask your father and mother about your name and keep the name. how much effort special force taken how many terrorist has been eliminated you know current government giving dead line . previous government 55 years ruled have done anything


சமீபத்திய செய்தி