உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு; ராகுல் விமர்சனமும், பாஜ பதிலடியும்!

பார்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு; ராகுல் விமர்சனமும், பாஜ பதிலடியும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லியில் நான் விடுத்த சவாலுக்கோ குற்றச்சாட்டுகளுக்கோ அமித்ஷாவிடம் எந்த பதிலும் இல்லை என நிருபர்களிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்தார். இதற்கு, '' உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சால் முழு நேரு குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியது'' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார். பார்லிமென்டில், தேர்தல் சீர்திருத்தம் குறித்த நேற்றைய விவாதத்தின் போது, 'சுதந்திர இந்தியாவில் முதல் ஓட்டு திருட்டில் ஈடுபட்டது முன்னாள் பிரதமர் நேரு' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார். இதற்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பதிலளித்த நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ராகுல் பேட்டி

இது தொடர்பாக இன்று நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: பார்லிமென்டில் எஸ்ஐஆர் விவாதத்தின் போது, நேற்று நான் இடைமறித்து பேசியதில் அமித்ஷா பதற்றம் அடைந்தார். அவர் பார்லிமென்டில் தவறான வார்த்தைகளை பிரயோகப்படுத்தினார். எனது குற்றச்சாட்டுகளை மறுத்து அமித்ஷா பதிலோ, ஆதாரங்களோ வழங்கவில்லை. நாங்கள் வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஓட்டு திருட்டு ஆதாரங்களை வெளியிட்டோம். அமித்ஷாவை நேரடி விவாதத்துக்கு அழைத்து சவால் கூட விட்டேன். நான் விடுத்த சவாலுக்கோ குற்றச்சாட்டுகளுக்கோ அமித்ஷாவிடம் எந்த பதிலும் இல்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.

பாஜ பதிலடி

இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: பார்லிமென்டில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசி கொண்டிருக்கும் போது ராகுல் வெளிநடப்பு செய்கிறார். இதுதான் அவரது ஜனநாயகம். உண்மையை கேட்க அவருக்கு வலிமை இல்லை. இந்த பழக்கத்தை ராகுல் கைவிட வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சால், முழு நேரு குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியது. இவ்வாறு கிரிராஜ் சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பேசும் தமிழன்
டிச 12, 2025 09:07

ஒரு அம்மா... அவர்களுக்கு நன்றாக தெரியும்


பேசும் தமிழன்
டிச 11, 2025 18:56

ராகுலுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்.... அதற்க்கு ஆளுங்கட்சி ஆட்கள் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போதே அவைக்கு வெளியே ஓடி விட வேண்டியது.....


naranam
டிச 11, 2025 18:46

திரு அமித் ஷா அவர்களின் பேச்சு மிக அருமை.


RAMESH KUMAR R V
டிச 11, 2025 17:07

இவர்களை கொண்டு இந்தியாவிற்கோ இந்திய மக்களுக்கோ எந்த பிரயோஜனவும் இருப்பதாக தெரியவில்லை. பார்லியமென்டின் காலத்தை வீணடிக்கத்தான் செய்கிறார்கள்.


HoneyBee
டிச 11, 2025 15:41

மக்கள் இந்த பாகிஸ்தான் கான்கிராஸ் கூட்டத்தை ஒழிக்க வேண்டும்


Barakat Ali
டிச 11, 2025 15:36

ராகுல் அவைக்கு வருவதே டைம் பாஸ் காகத்தான் .......


SIVA
டிச 11, 2025 15:25

1939 காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர் சுபாஷ் சந்திர போஸ் அந்த வெற்றியை ஜனநாயக முறைப்படி ஏற்காமல் காந்தி உண்ணாவிரதம் இருந்தார் , சுபாஷ் சந்திரா போஸ் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார் போஸ் அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்து இருந்தால் இந்தியா சுதந்திரம் இன்னும் சீக்கிரம் கிடைத்து இருக்கும் நாடும் வல்லரசாகி இருக்கும் , முதல் ஒட்டு திருட்டு மற்றும் முதல் தலைவர் திருட்டு எங்கு தொடங்கியது என்று இப்போது தெரிகின்றதா ....


theruvasagan
டிச 11, 2025 14:59

இவரை ஓட்டு திருட்டு பற்றி எழுத்து பூர்வமாக ஆதாரத்துடன் புகார் கொடுக்கச் சொல்லி தேர்தல் ஆணையம் பல தடவைகள் அழைத்தும் இந்த வெத்துவேட்டு புகார் கொடுக்காமல் ஓடிப்போய் ஒளிந்து கொண்டார். இந்த லட்சணத்துல இந்த அறிவாளி நேரடி விவாதத்துக்கு கூப்புட்டாராம். அமித்ஷா வரலியாம்.


sundarsvpr
டிச 11, 2025 14:15

பாரத தேசம் அடிமையிலிருந்து விடுபட மோஹன்தாஸ் கரண் சந்த் மற்றும் ஜவஹர்போராடிய விடுதலை தலைவர்களில் ஒருவர். இவர்கள் இருவரும் பிறப்பில் ஹிந்துமதமா அல்லது வேறு மதத்திற்கு மாறினார்களா என்பதும் நாட்டு மக்கள் அறியவேண்டும். பாரதம் ஒரு பகுதி பிரிந்து பாகிஸ்தான்உருவானததற்கும் காஸ்மீரின் ஒரு சிறிய பகுதி முஸ்லீம் கட்டுப்பாட்டிற்கிக்கு போனதற்கும் இவர்களின் ஆதரவு உண்டு என்ற சந்தேகம் உள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த மதங்கள் விரிவடைகிறது என்றால் பாரத மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. அப்போதுதான் ராகுலின் தேசப்பற்றின் உண்மைநிலை மக்கள் அறியமுடியும்


Anand
டிச 11, 2025 13:42

உண்மையை சொன்னால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டுக்களவாணிகளுக்கு முகம் வெலவெலத்துப்போகும், பிறகு வெளிநடப்பு என பின்னங்கால் பிடரியில் பட ஓடி சென்று கேண்டீனில் தஞ்சமடைவர்.


புதிய வீடியோ