ஸுக்கர்பர்க் தவறான தகவல் மத்திய அமைச்சர் விளக்கம்
புதுடில்லி: 'பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்களை நிர்வகிக்கும், 'மெட்டா' நிறுவனத்தின் தலைவரான மார்க் ஸுக்கர்பர்க், சர்வதேச அளவில் பிரபல, 'பாட்காஸ்ட்' தொகுப்பாளர் ஜோ ரோகனுக்கு அளித்த பேட்டியில், இந்திய லோக்சபா தேர்தல் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
அதன் விபரம்:
உலகின் பெரும்பாலான நாடுகளில், 2024ல் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சிகள் தோல்வியை தழுவியுள்ளன. விலைவாசி உயர்வு, கொரோனா பெருந்தொற்றை அந்த அரசுகள் கையாண்ட விதம், அதனால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு உள்ளிட்டவை உலக அளவில் தேர்தலில் எதிரொலித்துஉள்ளன.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.ஸுக்கர்பர்க்கின் கருத்தை, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ''உலகின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய தேர்தலில், 64 கோடி மக்கள் பங்கேற்றனர். மோடி அரசின் மீதுள்ள நம்பிக்கையை மூன்றாவது முறைாக அவர்கள் உறுதி செய்துள்ளனர். ஸுக்கர்பர்க் தவறான தகவலை பகிர்ந்துள்ளார்,'' என தெரிவித்துள்ளார்.