உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் விரைவில் திருக்குறள் மாநாடு மத்திய அமைச்சர் முருகன் தகவல்

டில்லியில் விரைவில் திருக்குறள் மாநாடு மத்திய அமைச்சர் முருகன் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: ''டில்லியில் விரைவில் உலகளாவிய திருக்குறள் மாநாடு நடத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர் முருகன் கூறினார். புதுச்சேரி பல்கலையில் மனோவசியம் குறித்த இருநாள் சர்வதேச மாநாடு துவக்க விழாவில், மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது:மனித நேயம், விஞ்ஞான உணர்வு, சீர்திருத்த உணர்வை வளர்ப்பது இந்திய குடிமகனின் கடமையாகும். கடந்த நவம்பரில் பிரதமர், ஒரு நாடு; ஒரு சந்தா முயற்சியை அறிமுகப்படுத்தி மருத்துவம், மேலாண்மை, சமூக அறிவியல், மனித நேய துறைகளில் அறிவார்ந்த மின் பத்திரிகைகள் அணுகலை நோக்கமாக செயல்படுத்தினார்.இதன் மூலம், 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், 30 வெளியீட்டாளர்களிடம் இருந்து, 13,000 இதழ்களை அணுகி பயனடைய முடியும்.ஆசிரியர்கள் திருக்குறளால் ஈர்க்கப்பட்டு, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, இணையதளம், சாட் 'ஜிபிடி' என எதுவாக இருந்தாலும், திருக்குறளுக்கு அப்பாற்பட்டது அல்ல. திருக்குறள் பொருள் நிரந்தரமானது. இது, தமிழின் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்று. பிரதமர் மோடி உலகம் முழுதும் திருக்குறளை பரப்பி வருகிறார்.உலகம் முழுதும் திருக்குறள் கலாசார மையம் அமைக்கப்படும் என்று, தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து நான்கு மாதங்களில், ஆறு நாடுகளில் திருக்குறள் கலாசார மையத்தை உருவாக்கியுள்ளோம். டில்லியில் திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என்று தமிழ் பற்றாளர்கள், சான்றாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். டில்லியில் விரைவில் உலகளாவிய திருக்குறள் மாநாடு நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

SP
ஜன 26, 2025 14:43

பொய்யான செய்திகளை பரப்பி கொண்டு இருக்கும் ஊடகங்களுக்கு முதலில் கடிவாளம் போடுங்கள் அதற்கு உண்டான நடவடிக்கை எடுங்கள் முதலில்


Palanisamy T
ஜன 26, 2025 12:20

இந்தியாவின் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் . திருக்குறள் சைவ சித்தாந்த நூல். மதம் மொழிகளெல்லா வற்றையும் கடந்து உண்மையை மட்டும் சொல்லும் மெய்யறிவு நூல். நாளை இந்திய மக்களும் நல்லப் பயன்கள் பெறுவார்கள். ஒரு தனி மாந்தருக்கு குடும்பத்திற்கு இனத்திற்க்கு நாட்டிற்கு அறநெறி வாழ்க்கையும் சிந்தனையும் மிக அவசியம். அறநெறி வாழ்க்கையும் வலிமையும் வளமான இந்திய நாட்டை உருவாக்கும். நாளடைவில் இந்த நற்ச் செயல் உலகிற்கும் நன்மைகள் பயக்கும்.


ஆரூர் ரங்
ஜன 26, 2025 14:03

சைவம் அடி முடி காணாத ருத்ரனை வழங்கச் சொல்கிறது. ஆனால் திருக்குறள் எட்டு பாடல்களில் இறைவனடி இறைவனின் பாதங்களை தொழுதலின் மகிமையைக் கூறுகிறது. திருமகள், விஷ்ணு பற்றியெல்லாம் உயர்வாகக் கூறுகிறது. எங்கெங்கு காணினும் பகவத் கீதை கருத்துக்களின் எதிரொலி. எனவே திருக்குறளை ஒரே ஒரு சமயக் கோட்பாட்டுக்குள் அடைத்துவிடாதீர்கள்.


முருகன்
ஜன 26, 2025 08:03

அடுத்த வருடம் தமிழகத்திற்கு தேர்தல் வருவதால்.....


N Sasikumar Yadhav
ஜன 26, 2025 09:21

கோபாலபுர கொத்தடிமையான உங்க புத்தி இப்படித்தான் கேவலமாக யோசிக்கும் உங்க திராவிட மாடல் மொதல்வர் அரிட்டாப்பட்டியில் ஸ்டிக்கர் ஒட்ட போயிருக்கிறாராம் .


Kasimani Baskaran
ஜன 26, 2025 07:52

சிறப்பு...


சமீபத்திய செய்தி