மத்திய அமைச்சர் பிரதானின் தந்தை காலமானார்
புதுடில்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான தேவேந்திர பிரதான், 84, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ஒடிசாவைச் சேர்ந்தவர் தேவேந்திர பிரதான். இவர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை. பா.ஜ., மூத்த தலைவரான தேவேந்திர பிரதான், மறைந்த பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில், 1999 - 2001 வரை, மத்திய வேளாண் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். ஒடிசா பா.ஜ., தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.டில்லியில் உள்ள மகன் தர்மேந்திர பிரதான் வீட்டில் வசித்து வந்த தேவேந்திர பிரதான், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி, மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.