உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாஜ முன்னாள் எம்எல்ஏ செங்காரின் தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம்கோர்ட்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாஜ முன்னாள் எம்எல்ஏ செங்காரின் தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம்கோர்ட்

நமது டில்லி நிருபர்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளியான பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு ஜாமின் வழங்கிய டில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம்கோர் தடைவிதித்தது.உத்தர பிரதேசத்தில் கடந்த 2017ல் பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக குல்தீப் சிங் செங்கார் பதவி வகித்தார். வன்கொடுமை உன்னாவில் உள்ள அவரது வீட்டிற்கு வேலை கேட்டுச் சென்ற 16 வயது சிறுமியை, அவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, காரில் சென்ற சிறுமி விபத்தில் சிக்கினார். இதில், அவருடன் பயணித்த உறவினர் உயிரிழந்தார். வழக்கை விசாரித்த டில்லி நீதிமன்றம் குல்தீப் சிங், குற்றவாளி எ ன, 2019ல் தீர்ப்பு அளித்தது. அவர் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கூறி ஆயுள் தண்டனை விதித்தது.இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தது. அத்துடன் ஜாமினும் வழங்கியது. டில்லி உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று (டிசம்பர் 29) குல்தீப் செங்காருக்கு ஜாமின் வழங்கிய டில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம்கோர் தடைவிதித்தது. இதனால் மூலம் செங்காரின் ஆயள் தண்டனையை சுப்ரீம்கோர்ட் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Venugopal S
டிச 29, 2025 14:58

எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டு விட்டார்களா?


Selvakumar Krishna
டிச 29, 2025 14:47

முதல் முறையாக பிஜேபி அழுத்தத்தை மீறி ஒரு நேர்மையான தீர்ப்பு வந்துள்ளது


சமீபத்திய செய்தி