உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாலை பயணத்தால் விபரீதம்: உ.பி.,யில் மினி வேன்-லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

அதிகாலை பயணத்தால் விபரீதம்: உ.பி.,யில் மினி வேன்-லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மினி வேன்- லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேச மாநிலம், யமுனா விரைவு சாலையில் மினி வேன்- லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ''இந்த விபத்து அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. ஆக்ரா நோக்கி சென்ற மினி வேன் எதிரே வந்த லாரி மீது மோதியது தான் விபத்திற்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என எஸ்.எஸ்.பி., ஷலோக் குமார் தெரிவித்தார்.விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

சத்தீஸ்கரில் மற்றொரு விபத்து

சத்தீஸ்கர் மாநிலம், கங்கர் மாவட்டத்தில் பாலத்தின் ஓரத்தில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவரில் கார் மோதி தீப்பற்றியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேஷ்கலில் இருப்து கான்கருக்கு காரில் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 1.30 மணிக்கு நிகழ்ந்து உள்ளது. விபத்தில் சிக்கிய போது கார் டிரைவர் உட்பட அனைவரும் போதையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Padmasridharan
ஜூலை 20, 2025 06:43

தலைப்பே சரியில்லை சாமி. . அப்ப அதிகாலையில் செய்தால் எல்லாமே விபத்தில் முடியுமா. மற்ற நேரங்களில் நடக்காதா. உள் விவரத்தில் மது போதையும், தூங்கினதும் காரணங்களென்று சொல்லியிருக்கிறீர்கள் மொதல்ல பணத்த வாங்கி லைசென்ஸ் கொடுப்பதை நிறுத்த வேண்டும் இந்நாட்டில். இதனால் நிறைய விபத்துகள் குறையும். .


ديفيد رافائيل
ஜூலை 19, 2025 16:22

இவனுங்க சொல் பேச்சு கேட்காத தற்குறிங்க


அப்பாவி
ஜூலை 19, 2025 14:38

கதி சக்தி தூள் கெளப்புது ஹைன். ஒவ்வொரு மாநிலமும் முதலிடத்துக்கு போட்டி போடுது ஹைன்.


தியாகு
ஜூலை 19, 2025 12:13

வட மாநிலங்களில் ஏற்படும் சாலை விபத்துக்களை காட்டிலும் டுமிழ்நாட்டில் டாஸ்மாக் மற்றும் கள்ள சாராய குடிகாரர்களால் ஏற்படும் சாலை விபத்துக்கள் மிக மிக அதிகம். ஏனோ அதெல்லாம் எந்த ஒரு செய்தி ஊடகங்களிலும் வருவதில்லை. முதலில் நம் முதுகில் இருக்கும் அழுக்கை பார்ப்போம். பிறகு வட மாநிலங்களுக்கு ஓடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை