உ.பி., சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 11ல் துவக்கம்
லக்னோ:உத்தரப் பிரதேச சட்டசபையில், மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து, உ.பி., சட்டசபை செயலக முதன்மைச் செயலர் பிரதீப் குமார் துபே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'உத்தரப் பிரதேச சட்டசபையில், மழைக்காலக் கூட்டத் தொடர், கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவுப்படி, வரும் ஆகஸ்ட் 11ம் தேதி காலை, 11:00 மணிக்கு துவங்குகிறது' என கூறப்பட்டுள்ளது. உ.பி., சட்டசபை கடைசியாக பிப்ரவரி 18ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை நடந்தது.