உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிட்டனில் மேயர் பதவிக்கு தேர்வான உ.பி., பொறியாளர்!

பிரிட்டனில் மேயர் பதவிக்கு தேர்வான உ.பி., பொறியாளர்!

புதுடில்லி: உ.பி.,யின் மிர்சாப்பூரை சேர்ந்த விவசாயியின் மகன் பிரிட்டன் நாட்டின் வெலின்போராக் நகர மேயராக தேர்வு செய்யப்பட்டார்.உத்தர பிரதேச மாநிலத்தின் மிர்சாப்பூரின் பதேஹாரா பகுதியை சேர்ந்த ராஜ் மிஸ்ரா எம்.டெக்., படிக்க லண்டன் சென்றார். பின்னர் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலையில் தகவல் அறிவியல் சான்றிதழ் பெற்றுள்ளார். ஐடி., துறையில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், பிரிட்டனின் நார்தாம்டன்ஷைரில் வர்த்தகம் நிறைந்து காணப்படும் நகரான வெலின்போரா நகர உள்ளாட்சி தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில் விக்டோரியா வார்டில் ராஜ் மிஸ்ரா வெற்றி பெற்றார். தொடர்ந்து, கடந்த செவ்வாய் அன்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் ராஜ் மிஸ்ரா மேயராக தேர்வு செய்யப்பட்டார். இங்கு ஆண்டுக்கு ஒரு முறை மேயர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். மேயராக தேர்வு செய்யப்பட்டது தனக்கு கிடைத்த கவுரவம் என அவர் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V.Mohan
மே 28, 2025 18:21

அடாடா திரு மிஸ்ரா அவர்களே, ஜாக்கிரதை. பிரிட்டனில் முஸ்லிம்களின் அட்டகாசம் அதிகமாகி உள்ளதாக செய்திகள் வருகின்றன. முஸ்லிம்கள் உங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கவனம் தேவை. உங்களால் முடிந்த அளவு முஸ்லிம்களிடம் நெருங்காதீர்கள்.