உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., கேரளா, பஞ்சாப் இடைத்தேர்தல் தேதி நவ.,20க்கு மாற்றம்

உ.பி., கேரளா, பஞ்சாப் இடைத்தேர்தல் தேதி நவ.,20க்கு மாற்றம்

புதுடில்லி: கேரளா, உ.பி, பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் நவ.,20க்கு மாற்றப்பட்டு உள்ளது.உ.பி.,யில் ஒன்பது, பஞ்சாபில் நான்கு, கேரளாவில் ஒன்று என மொத்தம் 14 சட்டசபை தொகுதிகளுக்கு நவ., 13ல் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஆனால், அந்த நாளில், திருவிழா மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் கோரிக்கை விடுத்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1zcqodcw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து, 14 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை நவ.,20ம் தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இங்கு ஓட்டு எண்ணிக்கை நவ.,20 ல் நடக்கும். அதேநேரத்தில் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நவ.,13ல் நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆரூர் ரங்
நவ 04, 2024 16:50

பாலக்காடு கல்பாத்தி கிராமத்தில் தமிழர்களே தேர்த்திருவிழா MLA இடைத்தேர்தல் நடத்துவதால் ஒத்திவைப்பு. அங்கேயும் தமிழனுக்கு மரியாதை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை