உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேன்சர் நோய் பாதிப்பு : சாவிலும் சத்தியத்தை நிறைவேற்றிய கணவன்

கேன்சர் நோய் பாதிப்பு : சாவிலும் சத்தியத்தை நிறைவேற்றிய கணவன்

லக்னோ: மனைவியை துப்பாக்கியால் சுட்டு தன்னையும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. உ.பி., மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தவர் குல்தீப் தியாகி 46. இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கேன்சர் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் மனம் உடைந்த இவர் நேற்று இரவு வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியை முதலில் சுட்டார். பின்னர் தனது நெற்றியில் சுட்டு இறந்தார். துப்பாக்கி சப்தம் கேட்ட குழந்தைகள் படுக்கையறைக்கு சென்ற போது தாய் கட்டிலில் பிணமாக கிடந்தார். தந்தை தரையில் இறந்து கிடந்தார்.

கேன்சர் குணமாகாது

அருகில் இவர் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். ' இந்த சாவுக்கு யாரும் காரணமல்ல. எனக்கு கேன்சர் இருந்ததால் பணத்தை வீணாக செலவு பண்ண மனம் இல்லை. செலவழித்தாலும் கேன்சர் குணமாகாது. ஆகையால் இந்த முடிவை எடுத்தேன். ' ' நானும் எனது மனைவியும் என்றும் பிரியக்கூடாது என சத்தியம் செய்துள்ளோம். எனவே அவரை இந்த மண்ணில் விட்டு செல்ல எனக்கு மனமில்லை. ஆகையால் அனுசுவையும் சுட்டு கொன்றேன். இந்த சாவுக்கும் எங்களது குழந்தைகளுக்கும் தொடர்பு இல்லை.' இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Karthik
ஏப் 17, 2025 21:15

வளரும் அவர்களின் குழந்தைகளுக்கு இது ஒரு தவறான முன் உதாரணம் - மட்டுமின்றி மற்றவர்களுக்கும் கூட..


தாமரை மலர்கிறது
ஏப் 17, 2025 19:11

பல கோடி கோடிக்கணக்கான கோள்களில் உயிர்கள் உள்ள ஒரே கோள் பூமி மட்டும் தான். பூமியில் மனிதனாக பிறப்பது அரிதினும் அரிது. கான்செர் நோய்க்கு மருத்துவம் பார்க்க தேவை இல்லை. ஆனால் சாகும்வரை உயிர் வாழ்ந்திருக்கலாம். அது இந்த இன்னுயிரை கொடுத்த ஆண்டவனை நீ மதிப்பது. உனது உயிரை எடுத்தது மட்டுமின்றி, எந்த பிரச்னையும் இல்லாத மனைவியின் உயிரை எடுத்தது கொலை குற்றம்.


என்றும் இந்தியன்
ஏப் 17, 2025 16:31

மிக மிக சரியான முடிவு. 1 உடல் உபாதையில் இருக்கும் வரை இழுத்துக்கொண்டு இருக்கவேண்டும் 2 அதிக பணம் செலவு செய்ய வேண்டும் அனாவசியமாக ஆனால் பூரண குணமாகாது 3 வியாதி குணமாகாமல் இழுத்துக்கொண்டே செல்வதற்கு பணம் அதிக செலவாகும், ஒரு தொழில் உருப்படியாக செய்ய முடியாது. இப்போது இறந்து விட்டால் அந்த தண்ட செலவு எதுவும் இல்லாமல் இருக்கும், மீதமுள்ள பணம் குழந்தைகளுக்கு உதவும்.


Madras Madra
ஏப் 17, 2025 14:15

கேன்சருக்கு பயப்படவில்லை செலவுக்கு பயப்பட்டு இந்த முடிவு பணம் இன்றி, இல்லையென்றால் குறைந்த அளவு பணம் கொண்டு மனிதர்கள் வாழ எதிர் கால அரசாங்கங்கள் வகை செய்ய வேண்டும்


Barakat Ali
ஏப் 17, 2025 13:21

பிறருக்கு ஞானம் புகட்டவேண்டிய வகுப்பினர். ஆனால் செய்தது அடாத செயல் ....


S Neelakkannan
ஏப் 17, 2025 13:16

கோழைத்தனமான முடிவு


Ramesh Sargam
ஏப் 17, 2025 13:05

அமெரிக்கா போல, இந்தியாவிலும் துப்பாக்கி சர்வசாதாரணமாக கிடைக்கிறது. இது எங்கு கொண்டுபோய் விடுமோ?


Murthy
ஏப் 17, 2025 13:02

நவீன மருத்துவம் சிலவற்றை குணப்படுத்தமுடியாது என்று முத்திரை குத்துவதுதான் காரணம். தன்னம்பிக்கைதான் வாழ்க்கை.. நம்பிக்கையோடு வாழ்வதுதான் இயற்க்கை விதி. மனிதனைத்தவிர வேறு எந்த உயிரினமும் தற்கொலை செய்துகொள்வது கிடையாது.


naranam
ஏப் 17, 2025 12:41

அநியாயமாக மனைவியை சுட்டுக் கொன்று விட்டான் இந்தப் படுபாவி. குழந்தைகளை அம்போ என்று அனாதையாக விட்டுச் சென்றது இவன் இறப்பதற்கு முன் செய்த கடைசி பாவம்..


KRISHNAN R
ஏப் 17, 2025 11:58

கேன்சர் மட்டும் அல்ல. எந்த வியாதிக்கும்..மருத்துவம் செலவு செய்ய முடியவில்லை... ஏழை மக்கள் பாடு.. இன்னும் மோசம்..... ஆனால் மருத்துவர் மற்றும் ஆஸ்பிடல்... நிலை. நன்றாக இருக்கும்


சமீபத்திய செய்தி