உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., செல்ல முயன்ற இந்தியப் பெண்: அட்டாரி - வாகா எல்லையில் தடுத்து நிறுத்தம்

பாக்., செல்ல முயன்ற இந்தியப் பெண்: அட்டாரி - வாகா எல்லையில் தடுத்து நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாகா: அட்டாரி - வாகா எல்லையில், பாகிஸ்தான் செல்ல முயன்ற இந்தியப் பெண்ணை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.உ.பி.,யின் மீரட் நகரைச் சேர்ந்தவர் சனா(30). இவர் கடந்த 2020ம் ஆண்டு கராச்சியை சேர்ந்த பிலால் என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மற்றும் ஒரு வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் சொந்த ஊருக்கு குழந்தைகளுடன் சமீபத்தில் வந்தார்.இச்சூழ்நிலையில் காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா வந்துள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டது. சனாவையும் குழந்தைகளுடன் வெளியேறும்படி மீரட் நகர நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.இதன்படி பாகிஸ்தான் செல்வதற்காக குழந்தைகளுடன் சனா பாகிஸ்தான் செல்வதற்காக அட்டாரி - வாகா எல்லை வந்தார். ஆனால், சனாவிடம் இந்திய பாஸ்போர்ட் உள்ளதால், பாகிஸ்தான் செல்ல அனுமதி மறுத்த அதிகாரிகள், மீரட் நகருக்கே செல்லும்படி அறிவுறுத்தினர்.அதேநேரத்தில் குழந்தைகளிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்ததால், அவர்கள் அந்நாட்டிற்கே செல்ல வேண்டும் என உத்தரவிட்டனர்.இதனால், கவலையிடைந்த சனா, அதிகாரிகள் முன்னிலையில் கண்ணீர் வடித்தார். இதேபோன்று பலர், எல்லையில் இருப்பதை பார்த்த சனாவும் அவருடன் வந்த குடும்பத்தினரும், தாயார்கள் இந்தியாவில் தங்கியிருக்க, குழந்தைகள் மட்டும் பாகிஸ்தான் செல்வதை பார்த்தனர். தொடர்ந்து அவர்கள், அதிகாரிகளிடம் தங்களது நிலைமையை விளக்கினர். குழந்தைகளுக்கு 3, 1 வயது மட்டும் ஆவதால், தனியாக வாழ முடியாது என்றனர். ஆனால், சனாவை மீரட்நகருக்கு செல்ல அறிவுறுத்திய அதிகாரிகள், அரசு புது உத்தரவு பிறப்பிக்கும் வரை காத்திருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக சனா கூறியதாவது: எனது குழந்தைகள் இங்கு தங்கியிருக்க முடியாது. நானும் பாகிஸ்தான் செல்ல முடியாது. எங்களை வரவேற்க கணவர் எல்லை வந்தார். ஆனால் முடியவில்லை. பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னையும், குழந்தைகளுடன் பாகிஸ்தான் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kasimani Baskaran
ஏப் 28, 2025 03:59

சிக்கல் மிகுந்த வாழ்க்கை என்பது இதன் மூலம் புலனாகிறது..


Mecca Shivan
ஏப் 28, 2025 10:26

சிக்கல் இல்லை.. நக்கல் ..மத வெறி கொண்டு பாக்கிஸ்தான் காரனை மணந்தால்தான் உண்மையான இஸ்லாமியர் என்று நினைத்து இப்படி அலைவது வாழ்க்கையா? உலகிலேயே மிக கேவலமாக நிலையில் பார்க்கக்கூடிய அளவில் இருப்பது பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள். அவர்களை தங்களை விட உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள் இங்கு இந்தியாவில் வாழும் பல இஸ்லாமியர்கள்.. அரேபியர்களுக்கோ அவர்களை தவிர மற்ற இஸ்லாமியர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள்தான் ..


மீனவ நண்பன்
ஏப் 28, 2025 00:51

சானியா மிர்ஜாவின் மகன் பாகிஸ்தான் குடிமகன் ..அம்மணி அனுப்பி வைக்க வேண்டுமா ?


Tetra
ஏப் 28, 2025 06:04

ஆம்


RAJ
ஏப் 28, 2025 00:44

போறேன்னு சொல்றவங்கள அனுப்பிவிடுங்க அய்யா.. தொலையட்டும்


Shankar
ஏப் 27, 2025 23:39

பாகிஸ்தான்காரனை எதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும்? இப்போ ரெண்டும்கெட்டான் நிலையா? அவதிப்படுங்க.


Kumar Kumzi
ஏப் 27, 2025 23:20

அந்த பெண்ணை பாக்கிஸ்தானுக்கு அனுப்புவதே சிறந்தது


arumugam mathavan
ஏப் 27, 2025 23:19

ஒரு நாட்டின் தீவிரவாதத்தை ஆதரிக்கும் முடிவு, எத்தனை பேருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்குது....இப்பவே இப்படி என்றால் சுதந்திரம் பெற்ற 1947 ல் மக்கள் எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருப்பார்கள்


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 27, 2025 23:04

நம் பாரத நாட்டை பிரிவினை வாதி முகமது அலி ஜின்னா 1947 ஆகஸ்ட் மாதம் 14 அன்று பிரித்த போது இப்படி தான் பல கோடி இந்துக்கள் ஆண்டாண்டு காலமாக தாம் மூதாதையர்கள் வாழ்ந்த பகுதிகளை விட்டு அனாதைகளாக நம் நாட்டிற்கு வந்தனர். பல லட்சம் பேர் மதமாற்றம் செய்ய பட்டனர், இன்னும் பல லட்சம் பேர் கொடூரமாக கொள்ளப்பட்டனர், பல இந்து பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர், நம் மக்களின் சொத்துக்களை பாகிஸ்தான் ஜிகாதி பயங்கரவாதிகள் அபகரித்துக் கொண்டனர் இன்னும் பல கொடுமைகள் நம்மவர்களுக்கு நடந்தது என்பது வரலாறு. நம் நாட்டு இஸ்லாமிய பெண்கள் ஏன் கேவலமான பாகிஸ்தான் காரர்களை கல்யாண செய்ய வேண்டும், கேட்கவே அருவெறுப்பாக உள்ளது.


K V Ramadoss
மே 01, 2025 13:09

தவறு மக்களது அல்ல..தலைவர்களுடையது... அவர்கள் எடுத்த அவசர முடிவு, இன்று வரை இந்தியாவை பாதித்துக் கொண்டிருக்கிறது,,


vijai hindu
ஏப் 27, 2025 23:01

போய் தொலைய வேண்டியதுதானே எப்ப நீ பாகிஸ்தானுக்கு மருமகள் ஆனியோ அப்படியே அங்கே ஓடிப் போய் இருக்கணும் எதுக்கு இந்தியா வந்த இந்த நாடகம் எல்லாம் வேண்டாம்


Bhakt
ஏப் 27, 2025 22:53

Let them feel the pain of separation of loved ones.


சமீபத்திய செய்தி