உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வு நடத்தும் யு.பி.எஸ்.சி., தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா ஏன் ?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வு நடத்தும் யு.பி.எஸ்.சி., தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா ஏன் ?

புதுடில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) தலைவர் பதவியை மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளார். இவரது பதவிக்காலம் முடிய, இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார்.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) தலைவராக, மனோஜ் சோனி பதவி வகித்து வந்தார். இவருக்கு வயது 59. இவர் 2017ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக சேர்ந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h9b8k2fy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02023ம் ஆண்டு மே மாதம் யு.பி.எஸ்.சி., தலைவராக பதவியேற்றார். சமீபத்தில், யு.பி.எஸ்.சி தேர்வில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவர் இன்று(ஜூலை 20) பதவியை ராஜினாமா செய்தார். கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக மனோஜ் சோனி குறிப்பிட்டுள்ளார்.

தொண்டு செய்ய விருப்பம்

குஜராத்தில் உள்ள சுவாமி நாராயண் பிரிவின் கிளையான அனுபவம் மிஷனில் தொண்டு செய்ய விரும்புகிறேன். போலி சான்றிதழ் வழங்கி, ஐ.ஏ.எஸ்., பணி பெற்ற பூஜா கேத்கர் விவகாரத்திற்கும் தொடர்பு இல்லை என மனோஜ் சோனி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர் ஒரு மாதத்திற்கு முன்பாக, ஜனாதிபதியிடம் கடிதம் வழங்கி உள்ளார்.

பந்தா ஐ.ஏ.எஸ்., அதிகாரிமீது புகார்

இதற்கிடையே, பார்வை மற்றும் மன ரீதியிலான பிரச்னை உள்ளிட்டவற்றை மறைத்தது மற்றும் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரிடம் விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இவருக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, தலைவர் பதவியை மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jysenn
ஜூலை 20, 2024 14:43

This could not be an isolated incident and there must be some thousands of Puja Khedkars working as IAS all over the country. A thorough investigation is needed to weed out the fake ias officials.


Lion Drsekar
ஜூலை 20, 2024 13:50

சற்று யோசித்து பாருங்கள் . இந்த பதவிக்கு வருபவர்கள் யாரவது ஒருவர் தாங்கள் பெற்ற பயிற்சி மற்றும் திறமையை எங்காவது தங்கள் வாழ்நாளில் பயன்படுத்தி , மக்களின் வறுமையைப் போக்கியிருக்கிறார்களா, திருட்டை வேரோடு கலைந்திருக்கிறார்களா ? வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார்களா ?மக்களின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்களா ? மக்கள் பிரநிதிகள் பாடும் பாட்டுக்கு , அவர்களின் ஜதிகளுக்கு மட்டுமே ஆடவேண்டிய ஒரு இலையில் இருக்க, இந்த பதவி ஒரு அழகுக்கு மட்டுமே பயந்த்ப்படுத்தப்படுகிறது . மக்களின் வரிப்பனடம் பல லட்சம் கோடி ? பல ஆண்டுகள் மக்களுக்காக நேர்மையாக உழைத்து பெயர்பெற்ற அரசு ஊழியர்களுக்கு பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக ஆளுநர் பதவிபோல் அவர்களுக்கு ஓடுதல், அவர்கள் தங்களது அனுபவங்களை கீழே பணியாற்றுபவர்களுக்கு பகிர்ந்து நாட்டை முன்னேறுவார்கள். எந்த பூனைக்கும் யாருமே மணி காட்டவே முடியாது . வந்தே மாதரம்


Kalyanaraman
ஜூலை 20, 2024 14:36

"பாடும் பாட்டுக்கும், .." இல்லையெனில் லைப்ரரி போன்ற ஏதோவொரு துறை தான். எல்லாம் கலந்தது. தலைவன் எவ்வழியோ ... குஜராத்தைப்போல் தமிழகத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும்?


Jysenn
ஜூலை 20, 2024 11:55

Puja Khedkar episode would not have happened without the blind connivance and active participation of some senior level ias officials. They should be taken to task.


venugopal s
ஜூலை 20, 2024 11:27

பூஜா கேத்கர் விவகாரத்தில் இவர் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்கிறாரே!


selvam
ஜூலை 20, 2024 11:25

தொண்டு பணி சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்


Apposthalan samlin
ஜூலை 20, 2024 11:07

நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்... என்னைக்கு தென் இந்தியா மக்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததோ அன்னைக்கே முறைகேடு நடந்திரிச்சு என்று அர்த்தம் பிஜேபி என்னைக்கு வந்ததோ தேர்வு வெளிப்படை இல்லை என்றாலே கோல் அழ தான் வடக்கு என்றாலே கோல் மால் தான்


Duruvesan
ஜூலை 20, 2024 15:28

நீட் தவிர எதுவும் எங்களுக்கு தெரியாது


Suppan
ஜூலை 20, 2024 16:20

சமச்சீர் கல்வி போன்ற உருப்படாத கல்விக்கொள்கைகளை வைத்துக்கொண்டு எப்படி தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.


ஆரூர் ரங்
ஜூலை 20, 2024 10:47

நாட்டில் நடக்கும் தேர்வுக்குற்றங்களைத் தவிர்க்க தடுக்க பட்ஜெட் டில் 176000 கோடி ஒதுக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. MORAL INSTRUCTIONS எனும் ஒழுக்கம் கற்றுக் கொடுக்கும் வகுப்பை நிறுத்தியதனால் ஏற்பட்ட தீராத நோய்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ