உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு அதிகாரி ஆகணுமா; 457 காலியிடங்கள் அறிவிப்பு; பொறியியல் படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

மத்திய அரசு அதிகாரி ஆகணுமா; 457 காலியிடங்கள் அறிவிப்பு; பொறியியல் படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.,) இன்ஜினியரிங் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்காக 457 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 22.மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன் உள்ளிட்ட பதவிகளுக்கு 457 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலையில் தொடர்புடைய பாடப்பிரிவில் பி.இ., அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்வது எப்படி?

பிரிலிமினரி, மெயின் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம் எங்கே?

நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் மதுரை, சென்னையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்ப கட்டணம்: ரூ. 200. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Madhu Mathi
அக் 20, 2024 23:06

V. Good keep it up


Loganathan Kuttuva
அக் 20, 2024 09:18

தேர்ந்துடுக்கப்பட்டவர்கள் இந்தியாவில் எந்த பகுதிக்கும் அனுப்பப்படுவர் .


sundarsvpr
அக் 20, 2024 07:52

வேலை வாய்ப்பு கொடுப்பது வரவேற்க தக்கது. ஒரே குடும்பத்தில் பல நபர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை தவிர்த்து சராசரி வருமானமுள்ள குடும்பத்தில் ஒரே நபர் உள்ளவர்களை தேர்வு செய்து வேலைவாய்ப்பு கொடுப்பது நல்லது. இது அரசியல் கட்சிகளில் இருந்தால் நல்லது. ஒரே குடும்பத்தை சேர்ந்த உற்றார் உறவினர் தொடர்ந்து பதவி வகிப்பது தவிர்க்கப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை