உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐஎம்எப் செயல் இயக்குநராக உர்ஜித் படேல் நியமனம்!

ஐஎம்எப் செயல் இயக்குநராக உர்ஜித் படேல் நியமனம்!

புதுடில்லி: சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்தியாவின் பணவீக்க இலக்கு கட்டமைப்பை உருவாக்கிய பொருளியலாளர்களில் ஒருவர் உர்ஜித் படேல். கடந்த 2016ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் 24வது கவர்னராக பொறுப்பு வகித்தார். 2018ல், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்தார்.அதற்கு முன்பு, மத்திய வங்கியின் துணை கவர்னராகப் பணியாற்றிய இவர், பணவியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி, புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை, வைப்பு போன்ற துறைகளைக் கவனித்து வந்தார்.கென்யாவில் பிறந்த இந்திய பொருளியலாளரான இவர், 30 ஆண்டுகளுக்கு முன்பே ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். முதலில் வாஷிங்டனில் பணியாற்றி வந்த இவர், 1992ல் ஐஎம்எப்-ன் டில்லிக்கு மாறுதலில் வந்தார். இந்த நிலையில், உர்ஜித் படேல் மீண்டும் ஐஎம்எப்-ன் செயல் இயக்குநராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஜெய்ஹிந்த்புரம்
ஆக 29, 2025 17:42

Although Patel cited personal reasons for resigning from RBI, experts have opined that he was forced to exit because of serious differences with the Government of India. The latter wanted more money from RBI to balance its fiscal deficit, which Patel did not agree to, citing requirement for long-term financial stability.


V Venkatachalam
ஆக 29, 2025 20:30

What is the use when a country is financially s and at the same time the countrys Government is not s?


திகழ்ஓவியன்
ஆக 29, 2025 11:55

ஏன் இந்தியாவில் அறிவாளிகள் இல்லையா, IMF க்கு குஜராத்தி, RBI கோவெர்னோர் குஜராத்தி, ED தலைவர் குஜராத்தி, CBI க்கும் குஜராத்தி அப்புறம் ECI க்கும் குஜராத்தில் இருந்து அப்புறம் எப்படி இந்தியா வல்லரசு ஆகும், கடவுள் தான் காக்கணும்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 29, 2025 12:36

என்ன செய்ய......சரக்கிற்கும் போதை பொருளுக்கும், இலவசத்திற்கும், 200ருக்கும், கொள்ளையடிக்கவும்,ஊழல் செய்யவும், ஸ்டிக்கர் ஒட்டவும், கொலை கொள்ளை கற்பழிப்புன்னு நமக்கு ஏகப்பட்ட வேலையிருக்கு.....இதை விட்டுட்டு அந்த வேலை பார்க்க போனா இந்த வேலைகளை யார் பார்ப்பாங்க....... அங்கிட்டு ஒதுங்கி போ.....!!!


V Venkatachalam
ஆக 29, 2025 15:01

மிளகாய் தூளை கரைத்து தலையில ஊத்திப்புட்டார். கோபால கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.


Sesh
ஆக 29, 2025 16:20

அங்கிட்டு ஒதுங்கி போ...


சமீபத்திய செய்தி