உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: ஜெய்சங்கர் திட்டவட்டம்!

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: ஜெய்சங்கர் திட்டவட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''பாகிஸ்தான் உடன் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. ஏப்.,22 முதல் ஜூன் 17 வரை, பிரதமர் மோடி அதிபர் டிரம்ப் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை,'' என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.லோக்சபாவில் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து ஆளும் மத்திய அரசு சார்பிலும் எதிர்கட்சிகள் சார்பிலும் விவாதம் நடந்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:பாகிஸ்தானின் நீண்டகாலமாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருவதை சர்வதேச நாடுகளுக்கு அம்பலப்படுத்த இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானின் அத்துமீறல் வரலாற்றை எடுத்துக்காட்டியது மட்டுமில்லாமல், அதன் உண்மையான முகத்தை ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் மூலம் பதிலடி கொடுத்து உலகிற்கு வெளிப்படுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டது.பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் பாகிஸ்தானின் பங்கை உலக நாடுகள் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய வலுவான ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.பயங்கரவாதத்திற்கு எதிராக எங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை நாங்கள் உலகத் தலைவர்களிடம் கூறினோம். எங்களை பாதுகாக்க எங்களுக்கு உரிமை உண்டு.எல்லையைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவின் பதில் ஆபரேஷன் சிந்தூருடன் முடிவடையாது. எங்கள் குடிமக்களையும் நலன்களையும் பாதுகாக்க தேவையான எந்த நடவடிக்கையையும் நாங்கள் எடுப்போம்.தேசிய பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், பாகிஸ்தானியர்களுக்கான விசா கட்டுப்பாடுகள் தொடரும்.சிந்துார் நடவடிக்கை தொடங்கியது முதல் பல்வேறு அழைப்புகளை நாங்கள் பேச வேண்டியிருந்தது. நான் 27 அழைப்புகளில் பேசினேன். பிரதமர் மோடி, 20 அழைப்புகளில் பேசினார். 35 முதல் 40 ஆதரவு கடிதங்கள் வந்திருந்தன.நாம் சிந்துார் நடவடிக்கைக்கு ஆதரவான ஒரு கருத்தாக்கத்தை ராஜதந்திர செயல்பாடுகள் மூலம் உருவாக்க வேண்டியிருந்தது. ஐ.நா.,வில் இருக்கும் 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே சிந்துார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.இப்போது தான் நாங்கள் மாலத்தீவில் இருந்து திரும்பி வந்துள்ளோம். அந்த நாடு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், இந்திய நிறுவனம் ஒன்றை, விமான நிலைய திட்டத்தில் இருந்து வெளியேற்றியது. அதே நாடு, இப்போது இரு விமான நிலையங்கள் அமைக்கும்படி இந்தியாவை வலியுறுத்துகிறது.அமெரிக்காவுடன் நடந்த உரையாடல்களில், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், சிந்துார் நடவடிக்கையுடன் வர்த்தகம் தொடர்புபடுத்தி பேசப்படவில்லை. ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் பேசிக்கொள்ளவே இல்லை.மோடி சொன்ன பதில்அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ் 9ம் தேதி போன் செய்து, பிரதமர் மோடியிடம் பேசினார். சில மணி நேரங்களில் பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவித்தார். அதற்கு பிரதமர், 'அப்படி தாக்குதல் நடத்தினால், அதற்கு மிகச்சரியான பதிலடி தரப்படும்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதன்படி நமது ராணுவம் மிகச்சரியான பதிலடி கொடுத்தது. நமது தாக்குதல் மூலம் சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளங்களின் படங்களை அனைவரும் பார்த்தனர். இதன் மூலம் நாம் சொன்னதை செய்து காட்டியுள்ளோம்.பல நாடுகளின் தலைவர்கள் போன் செய்து, போர் நிறுத்தம் செய்வதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், நாங்கள், பாகிஸ்தான் டி.ஜி.எம்.ஓ., மூலம் வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே போர் நிறுத்தம் பற்றி பரிசீலனை செய்வோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தோம். அதன்படி தான் அவர்கள் டி.ஜி.எம்.ஓ., இந்திய டி.ஜி.எம்.ஓ.,விடம் வேண்டுகோள் விடுத்தார்.இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
ஜூலை 29, 2025 01:04

ட்ரம்ப் நிலவில் கூட வடை சூடுபவர்.


venugopal s
ஜூலை 29, 2025 15:40

அந்த நிலாவையே வடை என்று சொல்லி அதானிக்கு குறைந்த விலைக்கு விற்று விடுவார்!


Vijay D Ratnam
ஜூலை 28, 2025 22:22

தேசத்து எதிராக கருத்துக்களை உதிர்க்கும் பரப்பும் நாதாரிகள் இந்தியாவில்தான் அதிகம்.


venugopal s
ஜூலை 28, 2025 21:36

இப்படி சொல்வதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் அனுமதி பெற்று விட்டீர்களா?


vivek
ஜூலை 29, 2025 07:46

இது தேவையா


vivek
ஜூலை 29, 2025 09:15

நேற்று காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டு கொலை...


S. Balakrishnan
ஜூலை 28, 2025 21:02

வெளியுறவுத்துறை அமைச்சர் இப்போது பேசியதை எதிர்கட்சிகள் உள்பட அனைத்து நாடுகளும் புரிந்து கொள்ளும். உண்மையை உணர்ந்தவர்கள் கூச்சல் போட்டு குழப்பம் செய்ய மாட்டார்கள். தன்நிலை மறந்த சிலர் சரியான சிகிச்சை பெற்று நலம் பெற வேண்டும்.


Gopal
ஜூலை 28, 2025 20:26

மும்பை பாக்கிஸ்தான் தீவரவாத தாக்குதலுக்கு ஒன்றும் செய்யாத உதவக்கரை காங்கிரஸ்க்குக்கு சிந்தூர் நடவடிக்கை பற்றி கேட்க ஒரு அருகதையும் கிடையாது. சிதம்பரம் போன்ற துரோகிகள் நவ துவாரத்தையும் மூடிக்கொண்டு இருக்க வேண்டும். ஒரு கையாலாகாத காங்கிரஸ் இந்தியாவை 60 ஆண்டுகள் ஆண்டு உருப்படாமல் செய்து விட்டனர்.


Ramesh Sargam
ஜூலை 28, 2025 20:14

ட்ரம்ப் சுட்ட, சுட்டுக்கொண்டிருக்கும், இனி சுடப்போகும் வடைக்கு நாங்கள் பொறுப்பல்ல. தீவிரவாதிகளுக்கு எதிரான போர் இந்தியா தன்னிச்சையாக எடுத்த முடிவு. போரை நிறுத்தியதும் இந்தியா தன்னிச்சையாக எடுத்த முடிவு.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 28, 2025 20:13

கம்பி கட்டும் கதைகளை எல்லாம் அவிழ்த்துவிடுகிறார் .... இந்த கதையை இவரோட மேஸ்திரியை சொல்ல சொல்லுங்க மேஸ்திரி வாயில் என்ன வெச்சிருக்கார் ??? பேச்சு வராதா ??


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 28, 2025 20:07

.... இதை 56 இஞ்சுக்காரரை சொல்ல சொல்லுங்க ஏனெனில் ட்ரம்ப் அவரிடம் தான் பேசியதாக சொல்கிறார் .. உம்மிடம் இல்லை


முருகன்
ஜூலை 28, 2025 19:49

இது டிரம்ப் க்கு தெரியுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை