உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் தரையிறங்கியது அமெரிக்க ராணுவ விமானம்: தாயகம் வந்தனர் 104 இந்தியர்கள்!

பஞ்சாபில் தரையிறங்கியது அமெரிக்க ராணுவ விமானம்: தாயகம் வந்தனர் 104 இந்தியர்கள்!

சண்டிகர்: அமெரிக்காவில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றி வந்த ராணுவ விமானம் பஞ்சாபில் இன்று (பிப்.,05) மதியம் தரையிறங்கியது. 104 இந்தியர்கள் தாயகம் வந்து அடைந்தனர்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற உடன், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். மெக்சிகோ எல்லையில் அவசரநிலையை அறிவித்ததுடன், நாடு கடத்தும் நடவடிக்கையையும் முடுக்கிவிட்டார். அமெரிக்காவில், 18,000 இந்தியர்கள் சட்ட விரோதமாக குடியேறி இருப்பது தெரியவந்தது.சட்ட விரோதமாக குடியேறியவர்களை இந்தியா திரும்பப் பெறும் என, பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்து இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இதை தொடர்ந்து, இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்க நேற்று துவங்கியது. டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து, அமெரிக்க விமானப் படையின் சி - 17 விமானத்தில், முதற்கட்டமாக, 104 இந்தியர்களை அனுப்பினர்.இந்நிலையில், இன்று (பிப்.,05) மதியம் பஞ்சாப் அமிர்தசரஸில் அமெரிக்கா ராணுவ விமானம் இன்று (பிப்.,05) மதியம் தரையிறங்கியது.104 இந்தியர்கள் தாயகம் வந்து அடைந்தனர். அவர்களை அவர்களது வீட்டிற்கு பத்திரமாக அனுப்பும் பணி நடந்து வருகிறது. 'அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்தது. எங்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது' என தாயகம் திரும்பிய இந்தியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

sankaranarayanan
பிப் 05, 2025 21:15

தமிழகத்தில் ஊடகங்களில் பொதுவாக தினசரி பத்திரிக்கைகளில் 200 க்குமேல் இந்தியர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது என்று தவறான செய்திகளை பரப்பியுள்ளனர் இதுபோன்ற செய்திகளை ஊர்ஜிதமாக தெரிந்தபின் பத்திரிக்கைகளில் போட்டால் மக்களுக்கு பீதி உண்டாகாது இனி தவறை திருத்திக்கொள்ள வேண்டும்


sankaranarayanan
பிப் 05, 2025 17:53

அடுத்த விமானத்தில் ஓங்கோலை சேர்ந்தவர்களை அனுப்பி வைப்பார்களாம் ரோம்போ கவலையாகவே இருக்கிறது பிறகு அவர்களை முன்புநடந்தது போன்றே பஸ்ஸில் அல்லது காரில் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்


Mohammad ali
பிப் 05, 2025 20:34

அவங்களுக்கு திருட்டு ரயிலில் போய்தான் பழக்கமாம்.


Bye Pass
பிப் 05, 2025 20:35

வித்தவுட் டிக்கட்டில் அனுப்பனும்


Sridhar
பிப் 05, 2025 16:58

சட்டவிரோதமா குடியேறி குற்றம் புரிந்த ஒன்னோட நண்பர்களுக்கு பின்ன பூமாலை செண்டு குடுத்தா கூட்டிட்டு வரமுடியும்?


Senthoora
பிப் 05, 2025 17:06

கவலைப்படாதே சகோ பன்ஜாப் என்பதால் மெத்தனம், இதே பட்டேல் இனத்தவர் என்றால் மேல தாளத்துடன் வரவேட்பு நடந்திருக்கும். சீக்கிர அடுத்த பிலைட்டில் வருவார்கஇல் வருவார்கல், பட்டேல் இனத்தவர்கள் தான் அங்கு சட்டவிரோத குடியேறியர்கள்.


Ganapathy
பிப் 05, 2025 16:55

ஓங்கோலு குடியுரிமை தமிழகத்தில் செல்லாதே. எல்லா திருட்டுத்திராவிடிய களவாணிகழக கள்ளக்குடிகளையும் திருப்பி விரட்டணும்.


வாய்மையே வெல்லும்
பிப் 05, 2025 16:27

நம்மூரு திதி ராவுளு மாடல் எல்லோரும் யோசிப்பார்கள் .. இப்படியே போச்சுன்னா மோடியும் டிரம்ப் போல செய்தால் இந்தியாவில் உள்ள வங்காளதேச கள்ளக்குடிகளின் வோட்டு பறிபோவிடும். முதல்ல நாம இப்பவே அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை நாடுகதையதற்கு ட்ரம்ப் க்கு கருப்பு கோடி காட்டிவிடுவோம். டிராம்பும் நம்ம கருப்புபலூன் சகாக்களுக்கு பயந்து அடிபணிந்து இனிமேல் இப்படி செய்ய மாட்டார் என நம்புவோம் .... என மனக்கணக்கு போட்டு இருப்பார்கள்.


Velan Iyengaar
பிப் 05, 2025 16:24

இதுக்கு நேரு தானே காரணம் ???????? சும்மா கேட்டேன்


Bye Pass
பிப் 05, 2025 20:37

நீங்க பொறந்ததுக்கே தேச தந்தை தான் காரணம்


Velan Iyengaar
பிப் 05, 2025 16:23

நமது 56 இஞ்சுக்காரருக்கு மாபெரும் வெற்றி .. சர்வதேச அளவில் நடுநிலையை நிலைநாட்டிய விஸ்வகுரு வாழ்க ... வாழ்க .....நமது நாடு குடிமகன்களுக்கு இதுவரை நடந்தேறியிராத மாபெரும் மரியாதையை பெற்று தந்த விஸ்வகுரு புகழ் நீடூழிவாழ்க காலில் மற்றும் கையில் சங்கிலி ...ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு ..... ராணுவ விமானத்தில் கௌரவமிக்க பயணம் .....இதுவல்லவோ நமது விஸ்வகுருவின் இமாலய வெற்றி


visu
பிப் 05, 2025 19:55

வேறே என்ன செய்யணும் கள்ளக்குடியேறிகளை விரட்டித்தான் விடுவாங்க


Arul Selvan
பிப் 05, 2025 16:11

மோடி ஜி தேர்தல் பரப்புரையின் பொது, நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கர்கள் இந்தியாவில் குடியேற வரிசையில் நிர்ப்பர்கள்னு.... ஆனா இப்ப என்னடான்னா ulta வா நடக்குதே... ஈஸ்வரா ...


Vijay D Ratnam
பிப் 05, 2025 15:48

சட்டத்துக்கு விரோதமாக ஒரு நாட்டில் குடியேறியவர்கள் அந்த நாட்டு அரசால் திருப்பியனுப்படுவது நியாயமான ஒன்று. ஒவ்வொரு நாடும் இதை கடைபிடிக்கவேண்டும். இந்தியாவில் சட்டத்துக்கு விரோதமாக இருக்கும் பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் உட்பட அனைத்து நாட்டு சட்டவிரோத குடியேறிகளை ஒருத்தரை விடாமல் நாட்டைவிட்டு வெளியேற்றும் வேலையை தொடங்கவேண்டும். மஹாரஷ்டிரா முதல் அசாம் வரை, காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை நாடு முழுக்க உள்ள மாநில தலைமை செயலாளருக்கும், காவல்துறை தலைமை இயக்குனருக்கும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டருக்கும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


Sridhar
பிப் 05, 2025 15:42

இவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், காலிஸ்தானிகளா, ஏன் சட்டவிரோதமாக சென்றார்கள் என்ற விவரங்களை ஒரு ஊடகம் கூட தெரிவிக்கவில்லை. இன்னும் இதேபோல் எவ்வளவு பேர் வேறு நாடுகளில் இருக்கிறார்களோ? அப்பாவி இளைஞர்களை ஆசை காட்டி ஏமாற்றி அவர்களிடம் மொத்தமாக ஒரு தொகையை அபகரித்துக்கொண்டு இடைத்தரகர்கள் மாபியா நடத்தும் இந்த அக்கிரமங்களை மரண அடி கொடுத்து நிறுத்தவேண்டும். இவையெல்லாம் விட்டுவிட்டு, அவர்களை சங்கிலியால் கட்டினார்கள், விமானத்தில் ஒரேயொரு கழிப்பறைதான் இருந்ததுன்னு தேவையில்லாத விசயங்களைத்தான் முன்வைக்கிறார்கள்.


Vathsan
பிப் 05, 2025 16:32

இதில் அதிகமானவர்கள் குஜராத் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தலா 33 பேர்கள்.. இதிலிருந்து குஜராத் மற்றும் ஹரியானாவில் சட்டவிரோத ஏஜென்ட்கள் அதிகம் உள்ளனர் என்பது தெளிவாகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை