உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவின் வரி விதிப்பால் 25,000 கோடி ரூபாய் இழப்பு

அமெரிக்காவின் வரி விதிப்பால் 25,000 கோடி ரூபாய் இழப்பு

அமராவதி : 'அமெரிக்காவின் வரி விதிப்பால், ஆந்திராவில் இறால் ஏற்றுமதியில், 25,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது' என, அம்மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார். அதில், 'நாட்டின் இறால் ஏற்றுமதியில் 80 சதவீதத்தையும், கடல்சார் ஏற்றுமதியில் 34 சதவீதத்தையும் ஆந்திரா கொண்டுள்ளது. தற்போது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளதால், மாநிலத்தின் இறால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 'மேலும், 50 சதவீதம் வரை ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், 25,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி கட்ட மத்திய அரசு உதவ வேண்டும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
செப் 17, 2025 10:02

அவங்களுக்கு சாப்பாடு வேணும்னா வரி கட்டி வாங்க சொல்லட்டும். ஏன் வரியை கட்டி ஏற்றுமதி செய்யறாங்க. ஏன் இங்கிருக்கும் இந்தியர்கள் சாப்பிட மாட்டார்களா சாமி.


ஆரூர் ரங்
செப் 16, 2025 12:28

இறால் பண்ணைகளால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு. மீனவர்களையும் உப்பளங்களையும் தவிக்க விடுகின்றன என்கிறார்கள். இப்படியாவது அன்னியச் செலாவணி ஈட்ட வேண்டுமா??


SANKAR
செப் 16, 2025 16:48

then how to pay for the massive and persistent of trade DEFICIT with CHINA currently at 90 billion dollar?


அப்பாவி
செப் 16, 2025 06:33

நிர்மலா ஜீ யிடம் சொல்லுங்க. 50000 கோடியா நிவாரணம்.குடுப்பாரு.


Kasimani Baskaran
செப் 16, 2025 03:55

உள்ளூரில் கூட குறைந்த விலையில் சிறிதளவே லாபத்துக்கு விற்கலாம். நட்டம் வராமல் தடுக்க வேறு நாடுகளுக்கு அடக்க விலைக்கு விற்கலாம்.