உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ ட்ரோன்களில் அமெரிக்கா முதலிடம்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

ராணுவ ட்ரோன்களில் அமெரிக்கா முதலிடம்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ராணுவ பயன்பாட்டிற்கான ட்ரோன்கள் கொண்ட நாடுகள் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது.அமெரிக்க ராணுவம், சமீப காலமாக பயங்கரவாதிகள் மீது நடத்தும் தாக்குதல் அனைத்தும் ட்ரோன் எனப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலமாகவே நடத்துகிறது. போர்க்களத்தில் தவிர்க்க முடியாத கருவியாகவே ட்ரோன்கள் மாறி விட்டன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அவற்றை உருவாக்குவதில் அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. எதிரிகளை கண்காணித்தல், அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் சிக்னல்களை தடுக்க இவை பெரிதும் உதவுகின்றன. இந்நிலையில், பவர் அட்லஸ் மற்றும் தி ட்ரோன் டேட்டாபுக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, அதிக ராணுவ ட்ரோன்கள் வைத்துள்ள நாடுகள் பட்டியலை வெளியிட்டு உள்ளன.அதன்படி,அமெரிக்கா - 13,000துருக்கி - 1,421போலந்து-1,209ரஷ்யா - 1,050ஜெர்மனி- 670இந்தியா - 625பிரான்ஸ் - 591ஆஸ்திரேலியா - 557தென் கொரியா - 518பின்லாந்து- 412 ட்ரோன்களை வைத்துள்ளன.இந்தியாவிடம் உள்ள 625 ராணுவ ட்ரோன்களில் 600 ஸ்டைலைட் மாடலை சேர்ந்தவை. இந்தியாவிடம் உள்ள பெரும்பாலான ட்ரோன்கள், இஸ்ரேலிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M.Srinivasan
அக் 08, 2024 06:22

சீனா குறித்து தகவல் இல்லை ?


s. narayanan
அக் 07, 2024 05:21

மறைகழன்டவனின் பட்டியல் கணக்கை நீங்கள் கண்டு மயங்கவேண்டாம்.


Rajinikanth
அக் 06, 2024 23:15

சீனாவை விட்டுட்டார்கள் போல தெரிகிறதே.நிச்சயம் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருப்பார்கள்.


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 23:40

சீனா தனது ராணுவ பலத்தைக் குறித்து உண்மையான தகவல்களை வெளியிடுவதே இல்லை ....


Sivagiri
அக் 06, 2024 22:01

அமெரிக்காக்காரனுக்கு எதிரிகள் அதிகம் , நமக்கு ஒரே ஒரு எதிரிதான் , லெப்ட்லயும் - ரைட்லயும் பிரிஞ்சு நின்னு வாலாட்டினு இருக்கான்- ஆனா துப்பாக்கியை நேரா புடிச்சு கூட சுட மாட்டான் , ஆனா மோசமான கழுத்தைபுலி குணம் கொண்டவன் - மேல உள்ள எதிரி - எதிரி மாதிரி , ஆனா அவனுக்கும் நம்மள மாதிரி அகோர பசி - நூத்தைம்பது கோடி வயிறு கொண்டவன் . .அதனாலதான் , எங்க போனாலும் , கைய வச்சிருவான் , எல்லோரையும் மிரட்டி வச்சிக்கினு , தன் வயிறை ரொப்பிக்கிடுவான் . . .


Jagan (Proud Sangi)
அக் 06, 2024 19:45

துருக்கி நம்மை விட பல விதமான/டிசைன் டிசைன்னா ட்ரோன் வடிவமைத்து தயாரிப்பது மட்டுமில்லை ஏற்றுமதியும் செய்கிறார்கள். துருக்கியின் 5th தலைமுறை விமானம் அமெரிக்காவிற்கே டப் குடுக்குது. நாம இன்னும் 1986 3rd தலைமுறை வடிவமைக்க பட்ட தேஜாஸ் குறைந்த அளவில் தான் தயாரிக்க முடியுது. நம்ம நாடு வேகம் பத்தாது.


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 19:15

ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களில் பல வகைகள் உள்ளன ...... எந்தச் சூழ்நிலையிலும் அவை பயன்படுத்த ஏற்றவை என்பதில்லை ..... ஆகவே அவற்றைக் குவித்து வைத்துக்கொள்வதால் மட்டுமே அனுகூலம் என்று சொல்லிவிட முடியாது ......