உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம்: இன்று மீண்டும் துவங்குது பேச்சுவார்த்தை

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம்: இன்று மீண்டும் துவங்குது பேச்சுவார்த்தை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வார்த்தை இன்று ( செப்.,16) நடைபெற உள்ளது. இதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் இன்று இரவு டில்லி வர உள்ளனர்.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஐந்து சுற்றுக்கள் இந்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், விவசாயம் மற்றும் பால்பண்ணைத் துறையில் இந்திய சந்தையை திறந்துவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தடைபட்டது. அமெரிக்க பிரதிநிதிகளும் இந்தியா வரவில்லை.இதனிடையே, சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிரம்ப் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடியும், இந்த பேச்சுக்களை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன எனத் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தடைபட்டு இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதாக வர்த்தகத்துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையில், தூதரகம், வர்த்தக சிறப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மட்டத்தில் என பல வகைகளில் நடைபெற்று வருவதாகவும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்திய சார்பில், வர்த்தகத்துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் பங்கேற்க உள்ளார்.இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அரசு சார்பில் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான குழுவினர் டில்லி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சதீஷ்
செப் 15, 2025 23:10

அடிபணிய மாட்டோம். ஆனா பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டே இருப்போம்.


ponssasi
செப் 15, 2025 20:45

அமெரிக்காவில் படித்து திறமை இருந்தால் நல்ல வேலை சம்பளம் எல்லாம் கிடைக்கும். இந்தியாவில் அப்படி இல்லை சாதிகள், இட ஒதுக்கீடு பின்தங்கியவர்களை தாங்கிப்பிடிக்கிறோம் என அவர்களை படித்து திறமையானவனை விட உயர் பதவியில் வைத்து அழகு பார்த்தல் இதுதான் நடக்கும்


Tamilan
செப் 15, 2025 19:55

கடந்த பத்தாண்டுகளாக நாட்டை அடகுவைக்க விற்க நடக்கும் தொடர் முயற்சி விரைவில் முறியடிக்கப்படும்


Balaji
செப் 16, 2025 06:50

திமுக தொழில்நுட்ப பிரிவு, தனித்தன்மை வாய்ந்தது. நல்ல பலம் வாய்ந்தது. 239 / 40 -ஐ யாரும் நெருங்க முடியாது. ஒவ்வொரு மாதமும் 100-க்கு மேற்பட்ட புதிய தொழில்நுட்ப வல்லனர்கள் சேர்கின்றனர். மேலும், எ.ஐ. தொழில்நுட்பத்திலும் நாங்கள் சிறந்த குழுவை உருவாக்கி உள்ளோம்.


Artist
செப் 15, 2025 17:50

உலக மக்கள் தொகையில் 4.5% கூட அமெரிக்காவில் கிடையாது .. அமெரிக்காவால் ஏற்படும் ஏற்றுமதி பிரச்னைகளை தரமான உற்பத்தி மூலம் மற்ற நாடுகளுக்கு அனுப்பி ஈடு கட்டலாம்


Shivakumar
செப் 15, 2025 19:19

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் தொழில்நுட்பம், ராணுவ உபகரணங்கள் மற்றும் ஐந்தாம் தலைமுறை விமானம், தகவல் தொழில்நுட்பம் இவைகளை இந்திய சார்ந்துள்ளதே. இந்திய மக்கள் அமெரிக்காதான் வேண்டும் என்று இந்திய குடியுரிமையை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவின் முகத்தில் இருக்கின்றார்கள். என்ன செய்வது.


SANKAR
செப் 15, 2025 20:23

Andhra CM CBN already reported 25000 crores loss in shrimp export to US.No other country can pay that much higher price and generate that much higher consumption


vivek
செப் 15, 2025 20:27

Redmond அகதிகள் விரட்டப்படுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை