உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.சி.பி., சாதிக்கும் உத்தப்பா நம்பிக்கை

ஆர்.சி.பி., சாதிக்கும் உத்தப்பா நம்பிக்கை

''இந்த ஆண்டு நடக்கும் 18வது ஐ.பி.எல்., டி 20 கிரிக்கெட் போட்டியில் பல புதிய சாதனைகள் நிகழ்வதை பார்க்க மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்,'' என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கர்நாடகாவை சேர்ந்தவருமான ராபின் உத்தப்பா தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:ஐ.பி.எல்., டி20 கிரிக்கெட் போட்டி 18வது ஆண்டாக நாடு முழுதும் நடக்கிறது. முதல் போட்டி கோல்கட்டாவில் இம்மாதம் 22ம் தேதி நடக்கிறது. முதல் போட்டி பெங்களூருக்கும், கோல்கட்டாவுக்கும் இடையே நடக்கிறது. அனைத்து அணிகளிலும் இளம் விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.இம்முறை மொத்தம் 1,000 ஆறு ரன்கள்; ஒரு போட்டியில் 300 ரன்கள்; இரட்டை ஹாட்ரிக் விக்கெட் என பல சாதனைகள் நிகழ்த்தப்படவுள்ளன.பேட்டிங்கில் மட்டும் கோலோச்சி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர் இம்முறை பவுலிங்கிலும் தங்கள் பலத்தை காட்டுவர். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ