உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரகண்ட் நிலச்சரிவு; சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேர் பத்திரமாக மீட்பு!

உத்தரகண்ட் நிலச்சரிவு; சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேர் பத்திரமாக மீட்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.கடந்த 1ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 30 பேர் கொண்ட ஒரு குழுவினர் உத்தரகாண்டில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். ஆதிகைலாஷ் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது கோயிலில் இருந்து 18 கி.மீ., தொலைவில் நிலச்சரிவு ஏற்பட 30 பேரும் அங்குள்ள ஆசிரமப்பகுதியில் தங்கினர். நிலச்சரிவு காரணமாக அங்குள்ள சாலை துண்டிக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.இந்நிலையில் 30 பேரும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி அவர்களை மீட்கும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக 15 பேரும், அடுத்த கட்டமாக எஞ்சிய 15 பேரும் என மொத்தம் 30 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக உத்தரகண்ட் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைவரும் விமானம் மூலம் வெகு விரைவில் சென்னை அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

nagendhiran
செப் 15, 2024 23:16

எங்க விடியல் முதல்வர் விட்டா சுனிதா வில்லியம்ஸையே மீட்டு வருவார்?அவருக்கு வாய்ப்பு தரல அதான்? நடக்கல?


Kasimani Baskaran
செப் 15, 2024 22:03

விட்டால் சுனிதா வில்லியம்ஸைக்கூட மீட்டு விடுவார்கள் போல இருக்கிறதே.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 15, 2024 21:18

அமெரிக்காவில் இருந்து வந்தவுடனேயே எனக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பை ஏகன் கொடுத்தான் .....


Mohanakrishnan
செப் 15, 2024 19:45

As usual thiruttu sticker by thiruttu model. Thiruttu model as usual written a letter like fishermen but actions taken , efforts done somebody else but name they need to thiruttu model and oru kootam light thooka


HoneyBee
செப் 15, 2024 18:51

ஸ்டிக்கர் ரெடியா. அடிமைகளே சீக்கிரம் ஒட்டுங்க. அடுத்து உக்ரைன் போரை நிறுத்தியது திராவிட மாடல் என்ற ஸ்டிக்கர் ரெடி‌ செய்யுங்க.


Bharathanban Vs
செப் 15, 2024 17:51

முதல்வர் ஐநாவிற்கே உத்தரவிடும் வல்லமை வாய்ந்தவர்...


Palanisamy Sekar
செப் 15, 2024 17:31

உத்திரகாண்ட ஊழியர்களும் அரசு அதிகாரிகளும் பத்திரமாக மீட்டெடுத்துவிட்டார்கள். என்னமோ ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்த பிறகுதான் மீட்பு பணியை செய்தார்கள் என்று பீலா விடக்கூடாது. அப்புறம் கஷ்டப்பட்டு மீட்பு பணிசெய்த உத்திரகாண்ட ஊழியர்கள் வேதனைப்படுவார்கள். இவர்கள் விளம்பரத்துக்கு அறிக்கையோடு நிறுத்திக்கொள்வார்கள்.அவர்களோ உயிரை பணயம் வைத்து மீட்டு வந்தார்கள். நியாயம் வேணாமா? அநியாயத்துக்கு விளம்பரம் தேடுறது நல்லதில்லைங்க


krishnamurthy
செப் 15, 2024 17:29

மீட்ட உத்தரகண்ட் அரசுக்கு அன்றி


ஆரூர் ரங்
செப் 15, 2024 17:21

இவர்களை காப்பாற்றியது திராவிஷ மாடலாக மட்டுமே இருக்கும். விரைவில் விண்வெளியில் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸைக்கூட போக்குவரத்து கழக பேருந்து அனுப்பிக் காப்பாற்றப் போகிறார் விடியல். நாசாவே வியந்து பார்க்கிறது.


சமீபத்திய செய்தி