உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வால்மீகி ஆணைய முறைகேடு; சி.பி.ஐ.,க்கு ஐகோர்ட் கெடு

வால்மீகி ஆணைய முறைகேடு; சி.பி.ஐ.,க்கு ஐகோர்ட் கெடு

பெங்களூரு; 'வால்மீகி ஆணைய முறைகேடு தொடர்பாக விசாரணை குறித்த நிலை அறிக்கையை, அடுத்த விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'வால்மீகி ஆணைய முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி, முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி, முன்னாள் எம்.எல்.ஏ., குமார் பங்காரப்பா ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.இதை விசாரித்த நீதிமன்றம், இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நேற்று நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ''வால்மீகி ஆணைய முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ.,யின் விசாரணை அறிக்கை, சீல் வைக்கப்பட்ட கவரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் விசாரணை நடந்து வருகிறது. ''அடுத்த கட்ட விசாரணை தொடர்பான அறிக்கை, மூன்று வாரங்களில் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த நீதிபதி, 'அடுத்த கட்ட விசாரணை அறிக்கையை, அடுத்த விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும். ஜன., 16ம் தேதிக்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ