வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Median இல்லாத அனைத்து சாலைகளிலும் , நடுவில், 2 அடி அகலத்திற்கு , வெள்ளை கோடுகளை விட்டு விட்டு போடுவது அவசியமாகும்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வேன்- லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.குஜராத்தின் பனஸ்கந்தா மற்றும் தன்சுரா பகுதிகளிலிருந்து யாத்ரீகர்கள் 20 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்-பலேசர் தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த வேன், எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து மிகவும் மோசமாக இருந்ததால் வேன் முற்றிலுமாக சேதமடைந்தது. லாரியின் முன்பகுதி மோதியதில் அப்பளம் போல் நொறுங்கியது. லாரியும் நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. அதில் இருந்த மூட்டைகள் சாலையெங்கும் சிதறிக்கிடந்தன. இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் தாமதமாக நடந்தது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது.வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
Median இல்லாத அனைத்து சாலைகளிலும் , நடுவில், 2 அடி அகலத்திற்கு , வெள்ளை கோடுகளை விட்டு விட்டு போடுவது அவசியமாகும்.