உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரகண்டில் வேன் கவிழ்ந்து விபத்து: 12 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி

உத்தரகண்டில் வேன் கவிழ்ந்து விபத்து: 12 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 12 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் அருகே 17க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அலகனந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 12 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மாநில பேரிடர் மீட்புக்குழு மீட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆன்மா சாந்தியடையட்டும்!

இது குறித்து புஷ்கர் சிங் தாமி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். காய மடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு

உத்தரகண்ட் பத்ரிநாத் அருகே சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் காயம்அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajamani K
ஜூன் 15, 2024 16:03

உத்தரகாண்ட் கூடுவாஞ்சேரி பக்கத்தில இல்லை. விபத்து நடந்த இடம் இமயமலை பகுதியில் சுமார் 10,000 அடி உயரம்.


Kannan Soundarapandian
ஜூன் 15, 2024 14:32

மிகவும் துக்க கரமான விபத்து.


நரேன்
ஜூன் 15, 2024 14:04

முதல்ல அங்கே எட்டுவழி சாலை.போடுங்க.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை