உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு தீபாவளி பரிசு; அகவிலைப்படி 3% உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு தீபாவளி பரிசு; அகவிலைப்படி 3% உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ., எனப்படும் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு, பணவீக்கத்தைப் பொருத்து ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. அந்த வகையில், தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்து. இதன்மூலம் 50 சதவீதமாக இருந்த மொத்த அகவிலைப்படி, 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 1.15 கோடிக்கும் அதிகமானோர் பலனடைய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vaithianathane K P
அக் 16, 2024 19:14

Good


sundarsvpr
அக் 16, 2024 17:01

அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெற்றவர்களுக்கும் அகவிலைப்படிவழங்குவது சரியா தவறா என்பது பற்றி இல்லை. இதனை கொட்டையெழுத்தில் நாளிதழில் பரபரப்படுத்து சரியான முறையாய் தெரியவில்லை. இது ஒரு அரசின் யுக்தி. விலைவாசி உயர்வு எல்லோருக்கும் தானே இதனால்தான் அரசு ஊழியர்களை பொதுமக்கள் பிரகாசப்படுத்துவதில்லை இரட்டை சம்பளம் ஓய்வு பெற்ற பிறகு வேலை செய்து பணம் பெறுபவர்கள் வாங்குபவர்களை எப்படி சரிபடுத்துவது.? ஓய்வு பெற்றவர்களில் பணி புரிவர்களுக்கு ஏன் ஓய்வுஊதியதை குறைக்கக்கூடாது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை