காஷ்மீருக்கு முதல் நேரடி ரயில் சேவை வந்தே பாரத் சோதனை ஓட்டம் வெற்றி
ஸ்ரீநகர்: நாட்டின் மற்ற பகுதி களுடன், காஷ்மீர் பள்ளத்தாக்கையும் இணைக்கும் வகையிலான ரயில் சேவை விரைவில் துவங்க உள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில், வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.தற்போது நாட்டின் மற்ற பகுதிகளுடன், ஜம்மு - காஷ்மீரின் ஜம்மு வரை மட்டுமே ரயில் சேவை உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tu2dvhxs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 உயரமான ரயில் பாலம்
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியையும் இணைக்கும் வகையில், உதம்புர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ், 272 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கும் பணி நீண்ட காலமாக நடந்து வந்தது.இதில் செனாப் நதியில் பிரமாண்டமான இரும்பு ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிகவும் உயரமான ரயில் பாலம் என்ற பெருமை பெற்றுள்ள இது, பொறியியல் துறையின் அதிசயமாகவும் போற்றப்படுகிறது.செனாப் நதிக்கு மேல், 1,178 அடி உயரத்தில், மொத்தம், 4,314 அடி நீளத்துக்கு இந்த ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களில், இந்த புதிய ரயில் பாதையில், ஆறு முறை ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டுள்ளன.இதில், அன்ஜி காத் பாலம் எனப்படும் நாட்டின் முதல் இரும்பு கம்பிகளால் நிறுத்தப்பட்டுள்ள தொங்கு ரயில் பாலமும் அடங்கும்.இந்நிலையில், ஜம்முவின் காத்ராவில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகர் புறநகரில் உள்ள நவ்காமில் அமைந்துள்ள ஸ்ரீநகர் ரயில் நிலையம் வரை நேற்று வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. காலை 11:30 மணிக்கு ஸ்ரீநகர் வந்த ரயிலுக்கு, மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்துஉள்ளனர்.சிறிது நேரம் அங்கு நிறுத்தப்பட்ட இந்த ரயில், பாராமுல்லா வரையிலான தன் சோதனை பயணத்தை நேற்று முடித்தது.வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனையே வெற்றிகரமாக நடந்துள்ளது. இதையடுத்து, இந்த ரயில் பாதையில் ரயில் சேவையை துவக்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.காத்ராவில் இருந்து பாராமுல்லா வரையிலான ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி விரைவில் துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கூடுதல் வசதிகள்
இந்த மார்க்கத்தில் இயக்குவதற்கென தனி சிறப்பு வசதிகள் உள்ள வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் பயன்பாட்டில் உள்ள 136 வந்தே பாரத் ரயில்களில் இருந்து இது வேறுபட்டது. உறைபனி காலத்திலும், எந்த சிக்கலும் இல்லாமல் பயணிக்கும் வகையில், இந்த வந்தே பாரத் ரயிலில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ரயிலில், பயணியருக்கும் பல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடும் குளிரிலும், வெப்பத்தை அளிக்கும் ஹீட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.